தூக்கி வாரிய கொண்டை.. டிப்டாப் காக்கிசட்டை.. ஸ்டேஷனுக்கு திடீர் என்ட்ரி..இப்ப மேடம் கம்பி எண்ணுறாங்க
சப்-இன்ஸ்பெக்டர் போல வேடமிட்டு நடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
சிதம்பரம்: கொண்டை, காக்கி சட்டையுடன் திடீர் என்ட்டிரி தந்த இளம்பெண்ணை பார்த்தும் ஸ்டேஷனில் ஒரு நிமிஷம் பதறிவிட்டனர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன், இதர போலீசாருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சிதம்பரம் மந்தகரை காமாட்சிம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சக்கரபாணி என்பவர், தண்ணி அடித்துவிட்டு பைக்கில் வந்தார். உடனே வண்டியை நிறுத்தி போலீசார், கேஸ் புக் செய்து, சக்கரபாணியைக் கைதுசெய்து ஸ்டேஷனில் வைத்திருந்தனர்.

சக்கரபாணி
அப்போதுதான், தலையில் கொண்டை, சப்-இன்ஸ்பெக்டர் யூனிபார்ம், கையில் வாக்கி டாக்கியுடன் அந்த பெண் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். அங்கிருந்தவர்களிடம் கடலூர் மகளிர் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராகப் வேலை பார்ப்பதாக சொல்லி, சக்கரபாணியை உடனே விடுவிக்குமாறு சொன்னார்.

விசாரணை
ஆனால், அங்கிருந்த போலீசாருக்கு அந்த சப்-இன்ஸ்பெக்டரை முன்னே பின்னே பார்க்காத மாதிரியே இருந்தது. அதனால், ஒருசில கேள்விகள் கேட்டு விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்போதே முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார் அந்த பெண்.

சூர்ய பிரியா
சந்தேகம் வலுவானதால், அந்தப் பெண்ணை சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் கொண்டுபோய் ஒப்படைத்தனர். அப்போது அவர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த பெண் ஒரு போலி சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரியவந்தது. பெயர் சூர்ய பிரியா, வயசு 27 ஆகிறது.. கணவன் பெயர் ராஜதுரை.. என்பதும் தெரிந்தது. சூர்ய பிரியா சென்னையை சேர்ந்தவராம்.. சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறாராம்!

சான்றிதழ்
இப்படி ஒரு சப்-இன்ஸ்பெக்டர் யூனிபார்மை போட்டுகொண்டு, பஸ்சில் ஓசி பயணம் முதல் பலரை ஏமாற்றி வந்ததும் அம்பலமானது. இப்படிதான் போலீஸ் டிரெஸ்ஸில் சென்று சான்றிதழ் கேட்டாராம். இப்போது அசன்கபாரும் புகார் அளித்துள்ளார்.

கைது
இந்த களவாணித்தனத்துக்கு எல்லாம் உடந்தை அவரது கணவர் ராஜதுரைதான் என்கிறார்கள். இப்போது ஜோடியாக போலீசாரிடம் சிக்கி உள்ளார்கள். கூடவே சக்கரபாணி என்பரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இதுவரை யார் யாரை, எந்த எந்த தினுசில் ஏமாற்றினார்கள், என்னென்ன முறைகேடுகளை செய்தார்கள் என்பதையெல்லாம் இனிதான் போலீசார் விசாரிப்பார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications