கடலினக்கறே போனோரே.. காரை கடலில் ஓட்டிய ஆசாமிகள்! கடலூரில் கலக்கிய மீனவர்கள்!
கடலூர்: கடலூர் அருகே கடலில் காரை ஓட்டிய போதை ஆசாமிகளை மீனவர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது நிலை என்னவாகியிருக்கும் என்பதை கற்பனைக் கூட செய்தி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
சென்னையில் இருந்து நேற்று முன் தினம் இரு பெண்கள் உள்ளிட்ட 5 பேர், எஸ்யூவி கார் ஒன்றில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூருக்கு வந்தனர். காரில் இருந்த 3 பேர் சரியான மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கார் கடலூர் முதுநகரை அடுத்த சொத்திக்குப்பம் கடற்கரையில் அதிகாலை 3 மணியளவில் காரில் சென்றனர்.

அப்போது போதை ஆசாமி ஒருவர், "நம்ம கார் சாலையில் மட்டும் அல்ல. மணற்பரப்பிலும் ஓடும்" என்று கூறி தனக்கு தெரிந்த 4 வீலர் மெக்கானிசத்தையும் தெரிவித்துக் கொண்டிருந்தார். இதை நம்பிய மற்ற போதை ஆசாமிகளும், "அப்படியா, ஓட்டித்தான் பார்ப்போமே" என கூறினர்.
கார் ஓடியது
குறைந்த அளவில் இருந்த மணற்பரப்பில் கார் ஓடியதால் குஷியான போதை நபர்கள், "கார் தண்ணீரிலும் ஓடும் அளவுக்குத்தான் மெக்கானிசம் செய்யப்பட்டுள்ளது" என கூற இதுதான் சாக்கு என நினைத்து கார் ஓட்டிய நபர் தண்ணீரிலும் காரை செலுத்தினார்.
வாக்குவாதம்
அப்போது சற்று தெளிவாக இருந்த நபர், வேண்டாம் என சொன்ன போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் கார் ஓட்டிய நபர் பிடிவாதத்துடன் தண்ணீரில் காரை இயக்கினர். சிறிது தூரம் தண்ணீரில் ஓடியதால் மகிழ்ந்த அந்த போதை ஆசாமிகள், இன்னும் சற்று தூரம் சென்றனர்.
அலையின் வேகம்
அப்போது அலையின் வேகத்தால் காரின் என்ஜின் திடீரென நின்று போனது. இதையடுத்து காரும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அப்போது அதிகாலை நேரம் என்பதால் அங்கு யாருமே இல்லை. ஆயினும் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடற்கரையில் வலைகளை தயார் செய்தனர்.
கார் கடலில் சிக்கியது
அப்போது கார் கடலில் சிக்கியதை பார்த்து அவர் பதறி அடித்துக் கொண்டு ஓடி போய் உள்ளே இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதில் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடலில் இருந்த காரை டிராக்டரில் கயிறு கட்டி இழுத்து கரை சேர்த்தனர்.
கார் தத்தளிப்பு
கார் கடலில் தத்தளித்தது குறித்தும் அதை மீனவர்கள் மீட்டது குறித்தும் தேவனாம்பட்டினம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த போதை ஆசாமிகளிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் போதையில் இருந்ததை அறிந்த போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கார் தண்ணீரில் ஓடுமா?
கார் தண்ணீரில் ஓடாது. அது தண்ணீரில் மூழ்கிவிடும். கார் தண்ணீரில் சென்றால், அது பல விதங்களில் சேதமடையும்.
இன்ஜின் சேதம்
ஒரு காரின் இன்ஜினுக்கு எரிபொருள் மற்றும் காற்று தேவை. தண்ணீருக்குள் செல்லும் போது, இன்ஜினின் ஏர் இன்டேக் (air intake) வழியாக தண்ணீர் உள்ளே நுழைந்துவிடும். இது இன்ஜினின் உள் பாகங்களை கடுமையாக சேதப்படுத்தி, இன்ஜினை செயலிழக்கச் செய்யும். இது 'ஹைட்ரோலாக்' (hydrolock) என்று அழைக்கப்படுகிறது.
எலக்ட்ரிக்கல் சேதம்
காரில் உள்ள பேட்டரி, வயரிங், கம்ப்யூட்டர் சிப்கள் போன்ற அனைத்து எலக்ட்ரானிக் பாகங்களும் தண்ணீருக்குள் மூழ்கினால் ஷார்ட் சர்க்யூட் ஆகிவிடும். இது காரின் செயல்பாடுகளை முழுவதும் பாதிக்கும்.
மிதக்கும் தன்மை
கார் வடிவமைக்கப்பட்டிருப்பது நிலத்தில் ஓடுவதற்காக. தண்ணீரில் ஓடுவதற்குத் தேவையான மிதக்கும் தன்மை (buoyancy) அதற்கு இல்லை. அதனால், ஒரு கார் ஆழமான தண்ணீருக்குள் சென்றால் அது உடனடியாக மூழ்கிவிடும்.
டயர் பிடிமானம்
ஒரு காரின் டயர்கள் நிலத்தில் பிடிமானம் (traction) பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. தண்ணீரில் டயர்கள் எளிதாக நழுவிவிடும். இதனால், காரைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
விபத்து அபாயம்
தண்ணீருக்குள் கார் சென்றால், பிரேக் சிஸ்டம், ஸ்டியரிங், மற்றும் பிற முக்கியமான பாகங்கள் சரியாக இயங்காது. இதனால் பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications