கடலூர் மக்கள் உஷாராக இருப்பது நல்லது .. ககந்தீப் சிங் பேடி அறிவுரை
கடலூர்: கஜா புயல் பாதிப்பு கடலூர் மாவட்டத்திற்கு அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககந்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
கஜா புயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவானது. இந்த புயல் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த பாதையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது மேற்கு திசை நோக்கி செல்கிறது.
இந்நிலையில் இது இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்பதால் கடலூர் மாவட்டத்துக்கு சற்று பாதிப்பு இருக்கும் என்பதால் அங்கு மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

முன்னெச்சரிக்கை
கடலூர் மாவட்டத்துக்கு புயல் பாதிப்பு பணிகளை பார்வையிட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில் கஜா புயல் பாதிப்பு கடலூர் மாவட்டத்திற்கு அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

எச்சரிக்கை
எந்த வானிலை முன்னெச்சரிக்கைகளையும் மக்கள் உதாசீனப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். அவர் இவ்வாறு மக்களை எச்சரிப்பதற்கு காரணம் உண்டு.

புயல்
கடந்த காலங்களை பார்த்தோமேயானால் மழை, புயல் என எதுவாக இருந்தாலும் கடலூருக்குத்தான் பெரும் சேதம் ஏற்படும். கடலூர் மாவட்டத்தில் தானே புயல் கடந்த 2011-ஆம் ஆண்டு கடலூருக்கும் புதுவைக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த ஆண்டின் அதிதீவிரமான புயல் என வர்ணிக்கப்பட்டது.

தண்ணீர் புகும்
இந்த புயல் கோர தாண்டவத்தை ஏற்படுத்தியது. அதுபோல் வடகிழக்கு பருவமழை பெய்தாலும் கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது உள்ளிட்டவை ஏற்படும். எனவே வானிலை எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications