ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர்.. விசாரணையில் வெளியான உண்மை! வலுவான ஆதாரம் இதோ!
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டை பள்ளி வாகனம் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கேட் கீப்பர், கேட்டை மூடாமல் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஜூலை 8ம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்றிருக்கிறது. ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் ரயில் வந்த நிலையில், வேன் மீது ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த விபத்தில் கேட் கீப்பர் மீது எந்த தவறும் கிடையாது என்று தெற்கு ரயில் தெரிவித்திருந்தது. இதற்கேற்றார் போல பங்கஜ் சர்மாவும், தான் கேட்டை மூடிதான் வைத்திருந்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் பங்கஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன.
குறிப்பாக கேட் கீப்பர் பங்கஜ், விபத்து நடந்த பிறகு ஆலம்பாக்கம் ரயில்வே அதிகாரியை தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் தான் கேட்டை மூடவில்லை என்பதை கூறியிருக்கிறார். இந்த உரையாடல் ரெக்காட் ஆகியுள்ள நிலையில், பங்கஜ்தான் விபத்து ஏற்பட முக்கிய காரணம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஆலம்பாக்கம் ரயில்வே அதிகாரியை தொடர்பு கொண்ட கேட் கீப்பர், கேட்டை மூடாமல் மூடியதாக கூறி ரகசிய எண்ணை பகிர்ந்திருக்கிறார். ஆனால் விபத்து நடந்த பின்னர்தான், மீண்டும் அதிகாரியை தொடர்பு கொண்டு விபத்து குறித்து பேசி, கேட்டை மூடவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு தமிழ் மொழி புரியாதாலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாலும்தான் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். மட்டுமல்லாது, கேட்க கீப்பராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து புதியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கேட் கீப்பராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் மொத்தம் 16,583 ரயில்வே கேட்கள், கேட் கீப்பரின் பராமரிப்பில் இருக்கின்றன. இந்த பகுதிகளில் இன்டர் லாக்கிங் சிஸ்டம் பொறுத்தப்படவில்லை. இந்த சிஸ்டம் பொறுத்தப்பட்டால், ரயில்வே கேட் தானாக மூடப்படும். பின்னர் தானாக திறக்கப்படும். கேட் மூடப்பட்டால்தான் ரயில் செல்வதற்கான அனுமதியே கிடைக்கும். ஆக தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த செயல்முறையை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு











Click it and Unblock the Notifications