சாம்பார் அண்டாவில் தவறி விழுந்த பெண் குழந்தை.. உடல் வெந்து பரிதாப மரணம்
சாம்பார் பாத்திரத்தில் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்தது
கடலூர்: ஒன்றரை வயது குழந்தை சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. இவரது மனைவி தனலட்சுமி.. இவர்களுக்கு 5 வயதில் கிரிஷ் என்ற ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் கிருபாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
மணிகண்டன் ஒரு விவசாயி.. சொந்தமாக நிலம் வைத்து, அதில் விவசாயம் செய்து வருகிறார்..அந்த வயலில் மேலும் சிலரை வேலைக்கு வைத்துள்ளார்.

சாம்பார்
இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மணிகண்டன், வயலில் வேலை செய்ய வந்திருப்பவர்களுக்கு சேர்த்து மதிய உணவு தயார் செய்யும்படி சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். தனலட்சுமியுடம் அனைவருக்கும் சேர்த்து சாப்பாடும், சாம்பாரும் செய்துள்ளார்.. கொதிக்க கொதிக்க இருந்த சாம்பாரை ஒரு பெரிய அண்டாவில் ஊற்றி வைத்துவிட்டு, குழந்தைக்கு பாலை காய்ச்சி கொடுப்பதற்காக கிச்சனுக்கு சென்றுள்ளார்.

குழந்தை
அப்போது குழந்தை கிருபாஸ்ரீ, தன் அம்மாவின் பின்னாடியே நின்று கொண்டிருந்திருக்கிறாள்.. தனலட்சுமியோ, அடுப்பில் பாலை வைத்துவிட்டு, அதையே கவனித்து நின்றுள்ளார்.. பின்னால் நின்றிருந்த குழந்தையை தனலட்சுமி கவனிக்கவில்லை.. பிறகு திடீரென சாம்பார் பாத்திரத்தின் மூடியை பிடித்து இழுத்துவிட்டது அந்த குழந்தை.. மூடியை இழுத்த வேகத்தில், அதே சாம்பார் பாத்திரத்தில் குழந்தை தவறி விழுந்துவிட்டது..

கதறல்
இதனால் குழந்தை உடம்பெல்லாம் வெந்து போனது.. வலியால் கதறி அழுதது.. இதையடுத்து அக்கம்பக்கத்தினரும் விரைந்து வந்து குழந்தையை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்... அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்...

உயிரிழப்பு
அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது... ஆனாலும் குழந்தை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.. பெண்ணாடம் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்புகூட, சேலத்தில் சுடுநீரில் குழந்தை ஒன்று தவறி விழுந்து பரிதாபமாக இறந்த நிலையில், இது மற்றொரு சம்பவமாக அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications