Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி கழிவறையில் பெற்ற குழந்தை.. தூக்கி வீசிய பிளஸ் 1 மாணவி - தம்பியிடம் விசாரணை! புவனகிரியில் பகீர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: புவனகிரியில் 11-ம் வகுப்பு மாணவி பள்ளியின் கழிவறையில் குழந்தை பெற்று எடுத்து வெளியில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே இறந்த நிலையில் ஆண் சிசு சடலம் ஒன்று கிடந்தது. இதை பார்த்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, உதவி ஆய்வாளர் சந்தோஷ் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இதனை அடுத்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பிளஸ் 1 மாணவி

பிளஸ் 1 மாணவி

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை அது என்பது தெரியவந்திருக்கிறது. புவனகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கழிவறைக்கு சென்றபோது குழந்தை இறந்து பிறந்துள்ளது.

தூக்கிவீசப்பட்ட குழந்தை

தூக்கிவீசப்பட்ட குழந்தை

பின்னர் மாணவி அதை தூக்கி எறிந்து விட்டு வகுப்பறைக்கு சென்று இருக்கிறார். பின்னர் பள்ளி முடிந்த பின்னர் நடந்தது எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து போலீசார் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

சித்தப்பா மகன்

சித்தப்பா மகன்

இதன் பின்னர் போலீசார் மாணவியை அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவியின் சித்தப்பா மகனான 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனோடு நெருங்கி பழகியதும், அதன் காரணமாகவே கர்ப்பம் ஏற்பட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

என்ன நடவடிக்கை?

என்ன நடவடிக்கை?

பள்ளி கழிவறைக்கு சென்றபோது குழந்தை பிறந்ததால் தூக்கி எறிந்து விட்டு வந்ததாகவும் சிறுமி தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியும், அவருடன் தொடர்பில் இருந்த மாணவரும் 18 வயதிற்கும் குறைவான சிறுவர், சிறுமி என்பதால் போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+