"உல்லாசத்துக்கு" மறுத்த பெண்.. அதிர்ந்து நின்ற கொத்தனார்.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க..!
கடலூரில் இளம்பெண்ணை கொன்ற ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்
கடலூர்: கள்ளக்காதலனை தவிர, சீதாவுக்கு இன்னொரு கள்ளக்காதலன் உள்ளார்.. இதுதான் விவகாரமாக வெடித்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்துள்ளது கீழமணக்குடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சீதா என்கிற சீதாலட்சுமி.. 45 வயதாகிறது.
இவர் திடீரென இறந்துவிட்டார்.. 2 நாட்களுக்கு முன்பு சடலமாகத்தான் இவரை கண்டெடுத்தனர்.. தலை மற்றும் உடம்பில் காயங்கள் இருந்தன..

அரை நிர்வாணம்
வீட்டிற்குள்ளேயே அரை நிர்வாணத்துடன் சடலம் கிடந்தது.. உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தரப்பட்டது.. புவனகிரி போலீசாரும் விரைந்து வந்தனர்.. சீதாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. உடம்பெல்லாம் காயங்கள் இருந்ததால், யாரோ அடித்து கொன்றுள்ளார்கள் என்று மட்டும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

சீதா லட்சுமி
இதையடுத்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அக்கம்பக்கத்தில் தங்கள் முதல் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது பக்கத்து வீட்டில் விசாரிக்கலாம் என்று சென்றால், அந்த வீட்டில் யாருமே இல்லை என்று தெரியவந்தது.. சீதா இறந்த அன்றிலிருந்தே அந்த வீட்டில் இருந்தவரை காணோமாம்.. அவர் பெயர் குமார்.. 45 வயதாகிறது.. கூலி வேலை செய்கிறார்.. ஒருவேளை சீதா இறப்பதற்கு முன்னமே, வெளியூர் சென்றிருந்தாலும், மரணத்தை கேள்விப்பட்டு இறுதிச்சடங்கிற்காவது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பஸ் ஸ்டாண்டு
ஆனால், குமார் வரவில்லை.. இதனால், இவர்மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.. இதனால், குமாரை தேட ஆரம்பித்தனர்.. இறுதியில், புவனகிரி பஸ் ஸ்டாண்டில் ஒளிந்து கொண்டிருந்த குமாரை சுற்றி பிடித்தனர்.. பிறகு தங்கள் பாணியில் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.. அப்போதுதான் ஒன்றுவிடாமல் வாக்குமூலமாக சொன்னார் குமார்.. சீதா லட்சுமிக்கும், குமாருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாம்.. பக்கத்து வீடு என்பதால், இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளனர்..

கொத்தனார்
பக்கத்து வீடு என்றாலும், குமார் வெளியூர்களுக்கு கூலி வேலைக்காக அடிக்கடி செல்வாராம்.. இப்போதைக்கு புதுச்சேரியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.. அதனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் சொந்த ஊருக்கு வருவார்.. அப்போதெல்லாம் சீதா லட்சுமியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு போயுள்ளார்.. அப்படித்தான், கடந்த 11ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார்.. வந்த குமார் அன்றைய நாள் சீதா லட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.

பாய்பிரண்ட்
ஆனால், சீதா லட்சுமி ஏற்கனவே ஒரு ஆண் நண்பரை வீட்டுக்கு வரசொல்லி இருக்கிறேன்.. அதனால், இன்றைக்கு வேண்டாம்.. உடனே அங்கிருந்து போகும்படி சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டதும் குமாருக்கு ஆத்திரம் வந்துள்ளது.. வாக்குவாதமும் தொடங்கி உள்ளது. சீதாலட்சுமி குமாரை ஆபாசமாக திட்டினாராம்.. அந்த கோபத்தில் அம்மிக் கல்லை எடுத்து வந்து, அவரது தலையில் போட்டு கொன்றுவிட்டதாக குமார் வாக்குமூலம் சொல்லி உள்ளார்..

கள்ளக்காதலன்
கோபத்தில்தான் அப்படி செய்தேன் என்றும், கொல்லும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.. இப்போது குமார் கைதாகி உள்ளார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. 2 நாட்களாகவே பூட்டிய கதவை திறக்காத இருந்த காரணத்தினால்தான், சீதாவின் மரணமே வெளியே தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.. ஆக, கள்ளக்காதலன் இருக்கும்போது, இன்னொரு கள்ளக்காதலனை வரசொன்ன கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன் ஜெயில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications