நள்ளிரவில் ஒரு போன் வந்துச்சு.. பாமக வேட்பாளரானது எப்படி? ரகசியம் உடைத்த இயக்குநர் தங்கர் பச்சான்!
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எப்படி என்ற ரகசியத்தை உடைத்துள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பாஜக உடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. அதற்கான வேட்பாளர் பட்டியலை பாமக நேற்று அறிவித்தது.

திண்டுக்கல் - திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ், தருமபுரி - சௌமியா அன்புமணி, சேலம் - ந. அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர், காஞ்சிபுரம் - ஜோதி முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் லோக்சபா தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் பாமக சார்பில் போட்டியிடுகிறார். 'அழகி', 'தென்றல்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான். அவ்வப்போது அரசியல் கருத்துகளை வெளியிட்டு வந்த தங்கர் பச்சான், முதன்முறையாக தேர்தல் அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையில், தனக்கு சீட் கிடைத்தது பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் தங்கர் பச்சான்.
தங்கர் பச்சான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் 37 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திரைப்படத் துறையில் தொடர்ந்து இயங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள 10 கோடி மக்களில் பெரும்பாலானோருக்கு என்னைத் தெரியும். என்னுடைய எழுத்து, பேச்சு, திரைப்படம் எல்லாமே முழுக்க முழுக்க என் மக்கள் சார்ந்தது தான். என் மக்களின் வாழ்க்கையைத்தான் பதிவு செய்துள்ளேன்.
மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் குரலாக நான் எழுப்பி இருக்கிறேன். தானே புயல் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் கடலூர், விழுப்புரம் மக்களுக்காக களப்பணி செய்துள்ளேன். தானே புயல் தொடர்பாக 36 நிமிடங்களில் ஒரு படத்தை எடுத்து எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பி, அரசியல் கட்சிகளின் கவனத்தை திருப்பினேன்.
கடலூர் மாவட்ட மக்களுக்கு இழப்பீடு வாங்கிக் கொடுத்ததில் பெரும் பங்கு அந்த டாகுமெண்டரிக்கு உண்டு. மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். இந்த மக்களுக்காக தேர்தலில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். கட்சிகளை பிடித்து ஜெயித்து விடலாம் என நினைக்கும் வேட்பாளர் நான் அல்ல. மக்களைக் காப்பாற்றவே நான் வந்துள்ளேன்.
தமிழ்நாட்டிலேயே அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டம் கடலூர். நெய்வேலியை பாலைவனம் ஆக்கிவிட்டு கையில் திருவோடு கொடுத்துவிட்டு போகப்போகிறார்கள். ஏற்கெனவே எடுத்த நிலங்கள் போக மறுபடியும் நிலங்களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் உள்ள பிரச்னைகளை நான் சென்று நாடாளுமன்றத்தில் பேசினால் புரிய வைக்க முடியும்." என்றார்.
பாமக வேட்பாளரானது எப்படி என்ற கேள்விக்கு பதில் அளித்த தங்கர் பச்சான், "எனக்கே தெரியாது. ஒரு படப்பிடிப்பு பணிக்காக லண்டன் சென்றிருந்தேன். ஒரு நள்ளிரவில் நடந்தது. தூங்கிக் கொண்டிருக்கும்போது போனில் அழைப்பு வந்தது. நான் போட்டியிட வேண்டும் என அவர்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள். நான் சிந்திப்பதற்கு சிறிது நேரம் கேட்டேன்.
சிறிது நேரத்தில் அவர்களிடம் பேசினேன். நான் கொடுத்து வரும் குரல் கட்சிக்கு நன்றாகவே தெரிந்தது. எனவே, "இதுதான் சரியான நேரம். பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. செயலில் இறங்க வேண்டும்" என்று ராமதாஸ் தெரிவித்தார். அதன்பிறகே சம்மத்தித்தேன். எல்லாம்1 மணி நேரத்தில் எடுத்த முடிவு. உடனே புறப்பட்டு வந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications