வெடித்த டயர்..எமனாக வந்த பேருந்து.. பண்ருட்டி பஸ் விபத்து கோரம்..உடனே உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்
கடலூர்: பண்ருட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நிகழ்ந்தது எப்படி என்று பேருந்தில் பயணம் செய்தவர்கள் கூறியுள்ளனர். விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் பண்ருட்டி பகுதிக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் செல்கின்றன. இந்நிலையில் காலை 10 மணி அளவில் கடலூரிலிருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து எதிரில் வந்தது.

இந்த பேருந்துகளில் ஏறிய பல பயணிகளுக்கு தெரியாது எதிரே எமன் வரப்போகிறான் என்று. எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நிகழ்ந்தது. பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேல்பட்டாம்பாக்கம் கிராமம் அருகே சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
எதிரில் தாறுமாறாக வந்த பேருந்து மோதாமல் இருக்க ஓரமாக பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். அப்படியும் முன் டயர் வெடித்து தாறுமாறாக வந்த பேருந்து எதிரில் ஓரமாக வந்த பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. இந்த கோர விபத்தில் இரண்டு பேருந்தின் முன் பக்கமும் அப்பளம் போல நொறுங்கி சேதமடைந்தது.
பேருந்துகளுக்குள் சிக்கியிருந்த பயணிகள் அலறினர். அப்போது அங்கிருந்த இளைஞர்களும் பொதுமக்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். ஆம்புலன்ஸ் மற்றும் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்.

மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும். லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications