"ஏகப்பட்ட ஆண்கள்.. 300 வீடியோக்கள்.. சொல்லியும் கேக்கல.. அதான்".. ராஜேஸ்வரியை கொன்ற கணவர் பகீர்!

மனைவியை கொன்ற கணவர் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: ஏகப்பட்ட ஆண்களுடன் ராத்திரி எல்லாம் பேசிக்கிட்டே இருப்பாள்.. ஆடி, பாடி டிக்டாக் வீடியோ மட்டும் 300 போட்டிருப்பாள்.. அந்த அரசியல் பிரமுகருடன் உறவு வேணாம் என்று சொல்லியும் கேக்கல.. அதான் ஆட்டுக்கல்லை தூக்கி போட்டு கொன்றேன் என்று மனைவியை கொன்ற கணவர் வாக்குமூலம் தந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்த தம்பதி குமரவேல் - ராஜேஸ்வரி... ராஜேஸ்வரிக்கு வயது 25.. கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குமரவேல் கார் டிரைவராக உள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அன்வர்‌ஷா நகர் 4-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இவர்கள் புதிதாக வாடகைக்கு குடிபோனார்கள்.. குமரவேல் டிரைவர் என்பதால் நைட் சவாரி வரும்.. அதனால் அடிக்கடி கார் எடுத்து கொண்டு கிளம்பி விடுவார்.

இரும்பு கம்பி

இரும்பு கம்பி

அந்த நேரங்களில் எல்லாம் ராஜேஸ்வரி, செல்போனில் சிலரிடம் பேசி வந்துள்ளார். இது ஒருநாள் குமரவேலுக்கு தெரிந்துவிட்டது.. மனைவியை கண்டித்துள்ளார்.. தம்பதிக்குள் சண்டையும் வந்துள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினமும் சண்டை வந்துள்ளது.. இதனால் ராஜேஸ்வரி தூங்கி கொண்டிருக்கும்போது, திடீரென குமரவேல் இரும்பு கம்பியால் அவரது தலையில் அடித்து.. பக்கத்தில் கிடந்த ஆட்டு கல்லை தூக்கி ராஜேஸ்வரி தலையில் போட்டுகொன்றார்.. இது சம்பந்தமாக போலீசார் அவரை கைது செய்தனர்.

ஜாமீன்

ஜாமீன்

ராஜேஸ்வரி டிக்டாக்கில் பொழுதை கழிக்க.. குமரவேல் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இதனால் குமரவேல் மீது கேஸ்கள் நிறைய உள்ளன.. இப்படி கொள்ளை சம்பவங்களில் அடிக்கடி குமரவேல் ஜெயிலுக்கும் போயுள்ளார்.. அவரை ஜாமீனில் எடுப்பதற்காக ராஜேஸ்வரி அப்பகுதியில் இருக்கும் கட்சி பிரமுகரை அணுகிவந்துள்ளனர்.

கண்டிப்பு

கண்டிப்பு

அந்த சமயத்தில்தான் அந்த அரசியல் பிரமுகருக்கும், ராஜேஸ்வரிக்கும் பத்திக்கிச்சு.. டிக்டாக்கில் ராத்திரியெல்லாம் பல ஆண்களுடன் ராஜேஸ்வரி பேசி வரும் நிலையில், இப்போது அரசியல் பிரமுகருடனும் தொடர்பு ஏற்பட்டு விட்டதால், குமரவேல் இதை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் ராஜேஸ்வரி அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து உறவில் இருந்துள்ளார்.. இதன் உச்சக்கட்டமாகத்தான் காதலர் தினத்தன்று 2 பேரும் குமரவேலுவுக்கு தெரியாமல் ஊர் சுற்றியுள்ளனர்.

ஆத்திரம்

ஆத்திரம்

காலையில் போய் ராத்திரிதான் ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார்.. பகல் எல்லாம் காரில் அந்த நபருடன் சுற்றியதை பற்றி குமரவேல் கேட்டுள்ளார்.. பிறகு இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர். ஆனால் மறுநாளும் அதே நபருடன் ராஜேஸ்வரி அந்த பிரமுகரை சந்தித்துவிட்டு வந்தார்.. இதனால் அன்றைய தினமும் சண்டை வந்துள்ளது.. குமரவேல் கேட்டதற்கு சரியாக பதிலும் சொல்லாமல் தூங்க போய்விட்டார்.. இதனால்தான் குமரவேலுக்கு ஆத்திரம் வந்துள்ளது.. தூங்கும்போது அடித்து கொன்று முகத்தையே சிதைத்து விட்டார்.

ஆட்டுக்கல்

ஆட்டுக்கல்

பிறகு போலீசார் வீட்டுக்குள் சென்று ராஜேஸ்வரி சடலம், ராஜேஸ்வரி மீது தூக்கி போட்ட ஆட்டுக்கல், இரும்பு கம்பியை போலீசார் கைப்பற்றினர்... இதை பற்றி குமரவேல் சொல்லும்போது, "நாங்க காதலித்துதான் கல்யாணம் செய்துக்கிட்டோம்.. நான் டிரைவர்.. அதனால வேலை விஷயமா வெளியூர் போய்டுவேன்.. ஆனா, ராஜேஸ்வரி இஷ்டத்துக்கும் டிக்டாக்கில் ஆடி, பாடி வந்தாள்.. எனக்கு அது பிடிக்கல.

இளைஞர்கள்

இளைஞர்கள்

பலமுறை சொல்லியும் டிக்டாக் வீடியோ போடறதை நிறுத்தல.. மொத்தம் 300 வீடியோக்கள் போட்டிருக்கிறாள்.. அவளுக்கு வசதியான வாழ்க்கை பிடிக்கும்.. கேட்டதை எல்லாம் வாங்கி தந்தேன்.. ஆனால் ஒருசிலதை என்னால வாங்கி தர முடியல.. அந்த பொருட்களுக்காகவே சில இளைஞர்களுடன் ராஜேஸ்வரி பழக ஆரம்பித்தாள்.. இதுதான் எங்களுக்குள்ள சண்டை வர காரணமா இருந்தது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+