ராத்திரியெல்லாம் ஆண்களோடு அரட்டை அடித்த ராஜேஸ்வரி.. ஆட்டுக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவர்!

மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: "ராத்திரியெல்லாம் ஆண் நண்பர்களிடம் பேச்சு.. இதுல காதலர் தினத்தன்று ஊர் சுத்திட்டு வந்தாள்.. அதான் இரும்பு கம்பியால் அடித்தும், ஆட்டுக் கல்லை தூக்கி தலையில் போட்டுட்டேன்" என்று டிக்டாக் மோக மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்த தம்பதி குமரவேல் - ராஜேஸ்வரி... ராஜேஸ்வரிக்கு வயது 25.. கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குமரவேல் கார் டிரைவராக உள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அன்வர்‌ஷா நகர் 4-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இவர்கள் புதிதாக வாடகைக்கு குடிபோனார்கள்..

ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி

குமரவேல் டிரைவர் என்பதால் நைட் சவாரி வரும்.. அதனால் அடிக்கடி கார் எடுத்து கொண்டு கிளம்பி விடுவார்.. அந்த நேரங்களில் எல்லாம் ராஜேஸ்வரி, செல்போனில் சிலரிடம் பேசி வந்துள்ளார். இது ஒருநாள் குமரவேலுக்கு தெரிந்துவிட்டது.. மனைவியை கண்டித்துள்ளார்.. தம்பதிக்குள் சண்டையும் வந்துள்ளது.

ரத்த வெள்ளம்

ரத்த வெள்ளம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேஸ்வரி தூங்கி கொண்டிருக்கும்போது, திடீரென குமரவேல் இரும்பு கம்பியால் ராஜேஸ்வரியின் தலையில் அடித்தார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார் ராஜேஸ்வரி.. அப்போதும் ஆத்திரம் அடங்காத குமரவேல், பக்கத்தில் கிடந்த ஆட்டு கல்லை தூக்கி ராஜேஸ்வரி தலையில் போடவும், தலை சிதறி அங்கேயே இறந்தார் அவர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

உடனே 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, வீட்டையும் பூட்டி விட்டு குமரவேல் வெளியே வந்துவிட்டார். நேற்று காலைதான் வீட்டிற்குள் இருந்து ரத்தமாய் வெளியே வந்ததை பார்த்தது பொதுமக்கள் அதிர்ந்தனர்.. பூட்டின வீட்டில் எப்படி ரத்தம் என்று அலறிபோய், பண்ருட்டி போலீசாருக்கு தகவல் சொல்லிவும்தான் விரைந்து வந்தனர்.. கதவை உடைத்து ராஜேஸ்வரி சடலத்தை மீட்டு விசாரணை ஆரம்பித்தனர்.

திருநங்கைகள்

திருநங்கைகள்

அப்போதுதான், குமரவேலுக்கு திருநங்கைகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.. அவர் ஒரு பக்க திருநங்கைகளுடன் பொழுதை கழிக்கவும், ராஜேஸ்வரி டிக்-டாக்கில் இறங்கிவிட்டார்.. வீடியோக்களை பதிவிடவும் ஏகப்பட்ட ஆண்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.. அவர்களிடம்தான் ராஜேஸ்வரி இரவு நேரங்களில் பேசி வந்துள்ளார்.. டிக்டாக் ஆண் நண்பர்கள் குறித்து குமரவேல், ராஜேஸ்வரியை கண்டிக்க, திருநங்கைகள் குறித்து ராஜேஸ்வரி குமரவேலை கண்டிக்க.. 2 பேரும் இதே சண்டையில் மூழ்கி வந்துள்ளனர்.

காதலர் தினம்

காதலர் தினம்

இந்த சமயத்தில்தான் காதலர் தினத்தன்று ராஜேஸ்வரி வீட்டை விட்டு சென்று, ராத்திரிதான் திரும்பி வந்துள்ளார்.. இதுதான் குமரவேலுக்கு இன்னும் கோபத்தை அதிகமாக்கி விட்டது.. அதனாலேயே இரும்புக் கம்பியாலும், ஆட்டுக்கல்லை தூக்கி போட்டும் கொன்றுள்ளது தெரிய வந்தது.. குழந்தைகளை தன் பெற்றோரிடத்தில் விட்டுவிட்டு, தான் மட்டும் தலைமறைவானார்... ஆனாலும் போலீசார் இப்போது குமரவேலுவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+