உயில் பத்திரம்.. நில ஆவணத்தை ரத்து செய்யக்கோரி வயதான தம்பதி கடலூர் கலெக்டரிடம் மனு.. நீளும் துயரம்
கடலூர்: தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும். இந்த பத்திரம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் அவ்வப்போது எழுந்து வரும்நிலையில், இதுதொடர்பாக மீண்டும் ஒரு புகார் கடலூரில் கிளம்பியிருக்கிறது.
வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன்.. 88 வயதாகிறது.. அவரது மனைவி பெயர் பாப்பா.. 78 வயதாகிறது.. இவர்கள் 2 பேரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை தந்துள்ளனர்.. அந்த மனுவில் உள்ளதாவது:

பராமரிப்பு: "நான் சொந்தமாக சேதுவராயன் குப்பத்தில் 1.50 ஏக்கர் நிலம் வாங்கி அனுபவித்து வந்தேன். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் என்னையும், என் மனைவியையும் பராமரிப்பதாக கூறி நிலத்தை உயில் எழுதி கொடுக்குமாறு சொன்னார்கள். ஆனால், என்னை ஏமாற்றி உயில் எழுதுவதற்கு பதிலாக, கிரய பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
இதையடுத்து, எங்களை பராமரிக்காததால், எழுதி கொடுத்ததை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். அப்போது, இளைய மகன் தனது மனைவி பெயருக்கு, நிலத்தை கிரயம் எழுதி வைத்தது தெரியவந்தது. நாங்கள் குடியிருந்த கூரை வீட்டையும் இடித்து விட்டனர். எனவே, எங்களை ஏமாற்றி கிரயம் பெற்ற ஆவணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த புகார் மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க உள்ளது.
கடலூர் சம்பவம்: கடலூர் சம்பவத்தை போலவே, பல்வேறு இடங்களில் இதுபோன்ற புகார்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இதற்குதான் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கிவருகிறார்கள்.
காரணம், எப்போதுமே ஒருவர் தன்னுடைய சொத்துக்களை இன்னொருவருக்கு செட்டில்மென்ட் செய்துவிட்டால், கொடுத்த சொத்தை மறுபடியும் திரும்ப பெற முடியாது. அதனால்தான் இது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. குடும்ப சூழல்கள் காரணமாக, சில பெற்றோர்கள், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக, வாரிசுகளுக்கு சொத்தை தந்து விடுகிறார்கள். வாரிசுகளும் இந்த சொத்தை பெற்றுக் கொண்டு, அதற்கு பிறகு தாய்-தகப்பனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.
செட்டில்மென்ட்: இதனால்தான், சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், மாவட்ட கலெக்டர்களிடம் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுகிறார்கள். எனவே, தான் சம்பாதித்த சொத்தை, அந்த செட்டில்மென்ட் பத்திரத்தை, ரத்து செய்ய வழியிருக்கிறதா? என்று ஆதங்கத்துடன் கேள்விகள் எழுகின்றன. இதற்காகவே, "சட்ட விதிகளுக்கு உட்பட்டு" வருவாய் துறை ஒருசில அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.
குறிப்பாக, "சில வழக்குகளில் மட்டும், செட்டில்மென்ட் பத்திரங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதனால், புதிதாக சொத்து வாங்கும்போது, அதை விற்பவர் செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாக பெற்றவராக இருந்தால், அதில் ஆட்சேபனை ஏதாவது பதிவாகி உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். அதேபோல, சொத்தின் மீது வருவாய் துறையில் ஏதாவது நடவடிக்கை நிலுவையில் உள்ளதா? என்பதையும் ஆராய வேண்டும்.
நிலுவைத்தொகை: அப்படி ஏதாவது நிலுவைத்தொகை பாக்கி இருந்தால், இது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, எப்போதுமே, சொத்துக்களை வாங்கும்போது, அதன் செட்டில்மென்ட் பத்திரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்கள் வருவாய்துறை அதிகாரிகள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications