கலவரத்தை செய்தது யார்? வீடியோ இருக்கு.. சைலேந்திர பாபு பளீர்.. கொத்து கொத்தாக தூக்கிய போலீஸ்!
கடலூர்: கள்ளக்குறிச்சியில் நேற்று யார் கலவரம் செய்தது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன, வீடியோவில் அவர்களின் முகங்கள் உள்ளன என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார். அங்கு ஏற்கனவே மாணவிகள் பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டள்ளது.
இந்த நிலையில் நேற்று பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக அங்கு பெரும் கலவரம் நடத்தப்பட்டது. பள்ளி பொருட்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டது. இது மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையாக கள்ளக்குறிச்சியில் உருவெடுத்தது.

நேரில் பார்வை
கலவரத்தை தொடர்ந்து உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி நேற்று பள்ளியில் ஆய்வு செய்த பின் அளித்த பேட்டியில், இது பற்றி முறையாக விசாரித்து வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் நீதி நிலைநாட்டப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே நேரத்தில் பொது மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தனியார் பள்ளிகள் அச்சம் அடைய வேண்டாம்.

பாதுகாப்பு
பள்ளிகளுக்கான பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்று குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பற்றி முறையாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. குற்றஞ்சாப்பட்ட பலர் விசாரணை செய்யப்பட்டு உள்ளனர். பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் மூவரும் விசாரணை செய்யப்பட்டனர்.

கைது
இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெற்றோர்கள் கேட்கும் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் அளிப்போம். மரணத்திற்கான காரணம் குறித்து விசாரிப்போம். ஒரு டிஐஜி, இரண்டு எஸ்பிக்கள் தலைமையில் 350 போலீசார் அந்த பள்ளி முன் பாதுகாப்பு பணிகளை செய்தனர். ஆனால் அதையும் மீறி இந்த கலவரம் நடந்துள்ளது. முதல் கட்டமாக 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டிஐஜி
காவல்துறையை சேர்ந்த ஒரு டிஐஜி, ஒரு எஸ்பி, 52 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். டிஐஜிக்கு அடிபட்ட போது கூட காவல்துறையினர் பெரிய ரியாக்ஷன் கொடுக்காமல், உயிர் சேதம் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். மக்களை மோசமாக தாக்காமல் பார்த்துக்கொண்டனர். அதை பாராட்ட வேண்டும். கலவரம் செய்தவர்கள் பற்றிய வீடியோ உள்ளது.

யார் செய்தது?
யார் கலவரம் செய்தது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. வீடியோவில் அவர்களின் முகங்கள் உள்ளன. ஏற்கனவே 70 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 329 பேர் மேலும் இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ ஆதாரங்கள், நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications