கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு.. பஸ், போலீஸ் வேனை எரித்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளி பேருந்து, போலீஸ் வாகனம் உள்ளிட்டவை தீயிட்டு எரிக்கப்பட்டது தொடர்பாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டம் இளைஞர்கள் மற்றும் சில அமைப்புகளின் கைக்கு சென்றதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் வெடித்தது.
பள்ளியின் பேருந்துகள், உடைமைகள், ஆவணங்கள் அனைத்தும் எரித்து நாசமாக்கப்பட்டன. காவல்துறை வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜாமீன் அளித்த உயர்நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட பள்ளியின் தாளாளர்,செயலாளர்,முதல்வர்,மற்றும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

சிறப்பு புலனாய்வு குழு
பள்ளியில் நடைபெற்ற கலவரம் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு ஆதாரங்களின் மூலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப் மூலம் கலவரத்தில் ஈடுபட பலரையும் அழைத்ததாக ஞானப்பிரகாசம், வல்லரசு ஆகிய இருவரை நேற்று இரவு சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். அதன்மூலம் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளது.

தாக்குதல் நடத்திய கலவரக்காரர்கள்
ஒரு பக்கம் கலவரத்தில் ஈடுபடாத, சம்பந்தப்படாதவர்களை கைது செய்துள்ளதாக கூறி கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள், காவல்துறை தலைமை அலுவலகம் மற்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதனிடையே கனியாமூர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கலவரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கலவரத்தின்போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 பேர், போலீசார் வாகனத்தின் மீது கற்களை வீசியதாக 2 பேர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

4 பேர் மீது குண்டர் சட்டம்
கலவரத்தின் போது மாட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து மாடுகளை திருடி சென்றதாகவும் மற்றும் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பூவரசன், புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வசந்தன் மற்றும் கடலூர் மாவட்டம் சிறுகிராமம் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி ஆகிய நான்கு பேரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த மாதம் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

சிசிடிவி
கனியாமூர் பள்ளி கலவரத்தில் வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் கலவரத்தின் போது மாடுகளை திருடியதாகவும், காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மட்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

எரித்தவர்கள் மீது குண்டர் சட்டம்
இதனிடையே பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளி பேருந்து, போலீஸ் வாகனம் உள்ளிட்டவை தீயிட்டு எரிக்கப்பட்டது தொடர்பாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்த, சின்னசேலம் அடுத்த தொட்டியம் லட்சுமணன் மகன் மணி, 44, பள்ளி பேருந்து மற்றும் மாணவர்களின் சான்றிதழ்களுக்கு தீ வைத்த சின்னசேலம் வீ.மாமாந்துார் ராமர் மகன் லட்சாதிபதி, 34, போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசிய உலகங்காத்தான் லட்சுமணன் மகன் சரண்ராஜ், 34, சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் அன்வர்பாஷா மகன் சர்புதீன், 38 ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலுார் மற்றும் கடலுார் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இந்த 4 பேரும் வெளியே வந்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். எனவே, குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பகலவன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் உள்ள 4 பேரிடமும் அதற்கான ஆணையை காவல்துறையினர் வழங்கினர். பள்ளி கலவரம் தொடர்பாக இதுவரை 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications