Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா செய்யும் வேலையா இது? துடிதுடித்து அடங்கிய பிஞ்சு உயிர்! கதிகலங்கி போன கள்ளக்குறிச்சி!

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, குடும்பத் தகராறில், பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்க்கு, ஆயுள் தண்டனை வழங்கி, மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவர் மற்றும் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த தம்பதியினர், அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.

மகளுக்கு விஷம்

மகளுக்கு விஷம்

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு, தனது கணவருக்கு கடன் வாங்கி கொடுத்து அதனை திருப்பிக் கொடுக்க முடியமால் தவித்து வந்துள்ளார் பரமேஸ்வரி. மேலும், கடன் வாங்கிய இடத்தில் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், பரமேஸ்வரி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பரமேஸ்வரி, தனது 9 வயது மகள் கரிஷ்னாவிற்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து விட்டு, தானும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் பரமேஸ்வரி.

மகள் உயிரிழப்பு

மகள் உயிரிழப்பு

இதனையடுத்து, தாயும், மகளும் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும், விஷம் தலைக்கேறி 9 வயது மகள் கரிஷ்னா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தாய் பரமேஸ்வரிக்கு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்ததால் தாய் பரமேஸ்வரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

போலீசார் வழக்குப்பதிவு

போலீசார் வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக பரமேஸ்வரியின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில், கள்ளக்குறிச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதயைடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

தாய்க்கு ஆயுள் தண்டனை

தாய்க்கு ஆயுள் தண்டனை

இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி கீதாராணி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், பரமேஸ்வரியை குற்றவாளி என உறுதி செய்து, குடும்ப பிரச்சனைக்காக பெற்ற மகளை விஷம் கொடுத்து கொலை செய்த பரமேஸ்வரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பு அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+