அண்ணனை காதலிக்காதே.. கேட்காத இளம் பெண்.. வலுத்த எதிர்ப்பு.. ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அண்ணனுடன் காதல்... வீட்டில் எதிர்ப்பு.. காதல் ஜோடி தற்கொலை

    கடலூர்: அண்ணனை காதலிக்காதே என்று வீட்டில் சொல்லியும் கேட்கவில்லை.. தங்கை முறை என்று சொல்லி இளைஞனும் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை.. இறுதியில் காதலர்கள் இருவருமே கண்களை மூடிக்கொண்டு ரெயில் முன் பாய்ந்துவிட்டனர்.

    கடலூர் மாவட்டம் அருகே தொரப்பாடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி.. 22 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள நர்சிங் காலேஜில் படித்து வந்தார்.

    love couple committed suicide near cuddalore

    இவரும், கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். மதன் ஒரு டூவீலர் மெக்கானிக். ஆனால் மதன் சுவாதிக்கு அண்ணன் முறையாகிறது.

    இவர்களின் ஒரு வருட காதல் விவகாரம், வீட்டுக்கு தெரிந்ததும் கொதித்து போய்விட்டனர். அண்ணனை எப்படி கல்யாணம் செய்ய முடியும் என்று எதிர்ப்பு சொன்னதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த சுவாதியும், மதனும் சாவிலாவது ஒன்று சேரலாம் என்று முடிவெடுத்தனர். நேற்று மாலை 5 மணிக்கு காலேஜ் முடிந்ததும் பைக்கில் சுவாதியை ஏற்றி கொண்டு, நிறைய இடங்களில் சுற்றி வந்தனர்.

    இறுதியாக இரவு பணப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு வந்தனர்.. கைகளை கெட்டியாக கோர்த்து கொண்டனர்.. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு கண்களை மூடிக் கொண்டு பாய்ந்தனர்.

    இதில் இருவரது உடல்களும் சிதறிவிட்டன.. இதை பார்த்து எஞ்சின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+