தடுக்காதீங்க.. நேராக சிதம்பரம் சென்ற சேகர் பாபு.. தீட்சிதர்களிடம் சொன்னது என்ன? பரபர பின்னணி
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சாமி தரிசனம் செய்ய வந்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பாக நாளை அந்த கோவிலில் ஆய்வு நடக்க உள்ள நிலையில் தீட்சிதர்களிடம் இன்று சேகர் பாபு ஆலோசனை செய்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா, கணக்கு வழக்கு சரியாக இருக்கிறதே என்பதை ஆராய நாளையும், நாளை மறுநாளும் இந்து சமய அறநிலையத்துறை குழு அங்கு செல்ல இருக்கிறது. ஆனால் இந்த ஆய்விற்கு தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் நடராஜர் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சாமி தரிசனம் செய்ய வந்தார்.

தரிசனம்
இன்று அவருடன் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மற்றும் அதிகாரிகளுடன் வந்தனர் நடராஜர் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவை தீட்சிதர்கள் வரவேற்று அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வைத்தனர். பின்னர் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர் இதை அடுத்து நடராஜர் கோயிலுக்குள் உள்ள பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு அங்கும் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நடராஜர் ஆலய ஆயிரங்கால் மண்டபத்தில் சிறிது நேரம் தரையில் அமர்ந்தார்.

என்ன நடந்தது?
அப்போது நடராஜர் கோயில் தீட்சிதர்களும் அவருடன் தரையில் அமர்ந்திருந்தனர். அப்போது கோயிலின் நிர்வாகம் எப்படி நடைபெற்று வருகிறது கோயில் பூஜைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து தீட்சிதர்கள் அமைச்சர் பாபுவிற்கு விளக்கமளித்தனர். அவற்றை அமைச்சர் சேகர்பாபு பொறுமையாக கேட்டுக் கொண்டார். அப்போது கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் விளக்கம் அளித்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு தீட்சிதர் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.

தடுக்காதீங்க
அதனால் கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழுவிற்கு ஒத்துழைப்பு அளியுங்கள் எனவும் கூறினார்.
எதையுமே தடுப்பதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கோவிலை விட்டு வெளியே வந்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது தீட்சிதர்கள் சம்பந்தப்பட்ட அவர்களது கோரிக்கையையும் அரசின் நிலைப்பாடும் பகிர்ந்து கொண்டோம்.

வேண்டுகோள் என்ன?
இந்து அறநிலைத்துறை சட்டதிட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும் எந்த அளவிலும் சிறு மனக்கஷ்டம் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் அன்பான வேண்டுகோள்.சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக நல்ல ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என எனக்கு தோன்றுகிறது. தீட்சிதர்கள் அறநிலைய துறை அதிகாரிகள் இருவரின் நிலைப்பாடுகளையும் கேட்டுள்ளோம், இந்த ஆட்சியை பொருத்தவரை அனைவருக்கும் சமமான நீதி வழங்க வேண்டும் என்ற ஒரு அரசாக செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications