கடலூரில் இசையமைப்பாளர் இமான்.. இதெல்லாம் இறைவன் போட்ட பிச்சை.. என்னா தன்னடக்கம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி நரிக்குறவர் காலனியில் புதிய குடியிருப்புகளை இசையமைப்பாளர் இமான் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தை அடுத்த பெரியாக்குறிச்சி நரிக்குறவர் காலனியில் குடியிருப்புகள் மற்றும் பாடசாலைகள் இசையமைப்பாளர் இமான் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கட்டி முடிக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்றைய தினம் நடந்தது. இசையமைப்பாளர் இமான் 6 கூரை வீடுகள் மற்றும் பாடச்சாலைகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் வழங்கினார். அவருக்கு நரிக்குறவர்கள் பாசி மாலை அணிவித்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
அவருடன் சமூக ஆர்வலர் உமா செல்வமும் இருந்தார். நரிக்குறவர்களின் ஒவ்வொரு குடிலாக சென்று பார்த்து அவர்களுடன் குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார் இமான். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். விசில் படத்தில் அழகிய அசுரா பாடல் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மிகவும் பிரபலம். அது போல் ஊதா கலரு ரிப்பன் பாடலும் இவர் இசையமைத்ததுதான். தற்போது வள்ளி மயில், மலை போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்
இவர் 2008 ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு பெண் குழந்தைகள். இந்த நிலையில் கடந்த ஆண்டு மோனிகாவும் இமானும் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விருத்தாசலம் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை மற்றும் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொடுத்துள்ளார். இவரின் சேவையை மக்கள் பாராட்டி வருகிறார்கள். இறைவன் எனக்கு கொடுத்ததால் நான் இல்லாதவர்களுக்கு செய்கிறேன் என தன்னடக்கத்துடன் இமான் கூறுகிறார்.
இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இமானும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் சேலம் கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி 10, 11 ஆம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவருடைய அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர். குடும்பத்தினரையே இழந்த அந்த சிறுமி தன் படிப்புக்கு உதவுமாறு அரசாங்கத்தை அணுகினார். இந்த செய்தியை அறிந்த இசையமைப்பாளர் இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
அது போல் கண் பார்வையற்ற திருமூர்த்தியின் கண்ணான கண்ணே பாடலை கேட்ட அவர் அந்த நபருக்கு படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார். அது போல் சமூகவலைதளங்களில் வெளியாகும் நலிவடைந்தவர்களுக்கு இருக்கும் பாடும் திறமையை கேட்டால் உடனே அவர்களுக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications