வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான்.. நாம் தமிழர் சீமான் கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: ரூ 2000 வாபஸ் என்பது வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைப்பது போன்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

முத்தரையர் நினைவு நாளையொட்டி புதுவை- கடலூர் 100 அடி சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான சம்பவத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகியிருக்க வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி அப்போது முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

Naam Tamilar Seeman criticises Rs 2000 withdrawal

ஆனால் இவர்கள் யாருக்கும் தார்மீக பொறுப்பே இல்லை. எடப்பாடி ஆட்சியிலும் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. ஆளுநருக்கு கடிதம் கொடுத்தால் போதுமா? தமிழக முதல்வர் ஏற்கெனவே வெளிநாடு சென்றிருந்தாரே அதன் மூலம் என்ன முதலீடுகளை தமிழகத்திற்கு பெற்றுத் தந்தார். தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை.

தமிழ் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் எங்கே இருக்கு... 12 ஆயிரம் பேர் தமிழ் தேர்வை எழுத வரவே இல்லை. தமிழ் தமிழ் என்கிறார்கள். ஆனால் இன்னா மச்சான் ரொம்ப ஃபீல் பண்ற.. டீ சாப்பிடலாம் வா" என்கிறார்கள். இதில் எங்கே தமிழ் வாழ்கிறது. ஒரு கடைத்தெருவில் கூட தமிழில் பெயர் இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் பெயர் இல்லை. ஒரு விமானத்தில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார்.

அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் அய்யா இந்த 80 வயதிலும் தமிழை தேடி சென்றது பாராட்டுக்குரியது. அடுத்து வருபவர்கள் தமிழில் தொடர வேண்டும். வெயிலின் கொடுமை நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொல்லப்பட்டதற்கும் ரூ 10 லட்சம் , கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் ரூ 10 லட்சம, இது என்ன நியாயம்?

இனி யாராவது மனமுடைந்தால் விஷம் குடிக்கத் தேவையில்லை. விஷச்சாராயம் குடித்தால் போதும் ரூ 10 லட்சம் கிடைக்கும் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள். ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவது முட்டாள்தனம். வேலையில்லாத தையல்காரர் யானைக்கு டவுசர் தைத்த கதைத்தான் என சீமான் விமர்சித்தார். ரூ 2000 நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும் கடந்த 19 ஆம் தேதி முதல் புழக்கத்தில் இருக்காது என்றும் ஆர்பிஐ அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+