சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் அவமதித்தனரா? உண்மையில் நடந்தது என்ன? தமிழிசை செளந்திரராஜன் விளக்கம்!
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட போது தீட்சிதர்களால் அவமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் பெருமாள் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் அவர் அமர்ந்துள்ளார். அப்போது தீட்சிதர் ஒருவர், இங்கே நீங்கள் உட்கார கூடாது, எழுந்து செல்லுங்கள் என்று தமிழிசையிடம் கூறியதாக தகவல் வெளியாகியது. இதனால் தீட்சிதர்களால் தமிழிசை அவமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

Recommended Video
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், சிதம்பரம் கோவிலில் எனக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. ஆயிரங்கால் மண்டபப் படியில் அமரக் கூடாது என்று ஒரு தீட்சிதர் சொன்னார். அதற்கு நான் இங்கே தான் அமர்வேன் என்று சொன்னேன். பின்னர் அவர் சென்றுவிட்டார். மற்ற அனைத்து தீட்சிதர்களும் என்னிடம் வந்து இறைவன் பிரசாதத்தை வழங்கினர். அந்த தீட்சிதர் கூறியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் அவமரியாதை என்ற செய்தி தவறானது என்று விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications