"நான் நல்ல மார்க் எடுக்கலைன்னா கல்யாணம் செய்துவச்சிடுவாங்க".. விருத்தாசலத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பிளஸ் 2 மாணவி பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவைச் சேர்ந்தவரின் 17 வயது மகள். இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை இறுதிச் சடங்கு நடந்தது. தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மாணவி
போலீஸார் விசாரித்ததில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் அவர் கூறுகையில், கணக்கு தேர்வை நான் சரியாக எழுதவில்லை. தமிழ் தேர்வை நான் சரியாக எழுதவில்லை. நான் கலெக்டராக வேண்டும் என என் அப்பா, அம்மா விரும்புகிறார்கள். ஆனால் என்னால் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியாது.

கல்லூரி
இதனால் என்னை கல்லூரியில் சேர்த்துவிடாமல் என் படிப்பை பிளஸ் 2 வுடன் நிறுத்திவிட்டு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்துவிடுவர். பெற்றோர் என்னை மன்னிக்கவும். நான் கடவுளிடம் செல்கிறேன். என் உடலை பார்க்க என்னுடன் படித்த நண்பர்கள் வந்தால் அவர்களை அனுமதிக்கவும்.

கடிதம் ஏன்
நான் இந்த கடிதத்தை ஏன் எழுதுகிறேன் என்றால் நான் எதற்காக இறந்தேன் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என அந்த கடிதத்தில் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். அண்மையில் கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம், விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவி தற்கொலை என தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினை
மாணவர்கள் எந்த பிரச்சினை என்றாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமே தவிர தவறான முடிவை எடுக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. அது போல் பள்ளிகளிலும் கவுன்சிலிங் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications