நான் "இங்கிலீஷ்காரன்".. என் வண்டியை எப்படி நிறுத்தலாம்.. குடித்துவிட்டு போலீஸிடம் உதார் விட்ட இளைஞர்
கடலூர்: நான் கடலூரில் படித்தவன் எனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியும் என குடித்துவிட்டு உதார்விட்ட இளைஞர் போலீசாரிடம் மாட்டிக் கொண்டவுடன் அரைகுறை இங்கிலீஷில் கத்தியதால் அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
Recommended Video
கடலூர் அருகே புதுவை மாநில எல்லையில் ஏராளமான மதுபானக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு சென்று மது அருந்திவிட்டு வருபவர்களை போலீஸார் ஆங்காங்கே பிடித்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு நபர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார்.

மது அருந்திவிட்டு
அவரை போலீசார் பிடித்தபோது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. போலீஸார் அவரிடம் உங்கள் பெயர் என்ன எந்த ஊர் என்று கேட்டதுதான் தாமதம்; நான் திருச்சிக்காரனோ, திருநெல்வேலிக்காரனோ அல்ல. நான் கடலூர் பகுதியை சேர்ந்தவன். நான் கடலூர் தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்தவன்.

வாகனத்தை நிறுத்தியது ஏன்
அதனால் எனது வாகனத்தை நீங்கள் நிறுத்தக் கூடாது. என்னை ஏன் நிறுத்தினீர்கள் என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கடகடவென உளரித் தள்ளினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் ஏன் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்ட போது மீண்டும் நிறுத்தாமல் அவர் ஆங்கிலத்தில் சரியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறினார்.

இலக்கணத்துடன் பேச்சு
இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் சிரித்த நிலையில் ஏன் சிரிக்கிறீர்கள் நான் ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் பேசுகிறேன் என கூறினார். பின்னர் போலீஸார் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்களது பாணியில் சிறப்பாக கவனித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கட்சிக்காரர்
பொதுவாக குடித்துவிட்டு நான் வழக்கறிஞர், இந்த கட்சியை சேர்ந்தவர், அந்த கட்சியை சேர்ந்தவர் என்றும்தான் போலீஸாரிடம் பூச்சாண்டி காட்டுவார்கள். ஆனால் இந்த நபரோ அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு போலீஸாரிடம் பேசியதோடு தான் இலக்கணத்துடன்தான் பேசுகிறேன் என சொல்லியுள்ளார். என்னதான் இருந்தாலும் ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அதை குடித்திருந்தாலும் கெத்தாக பேசியுள்ளதை சிலர் வரவேற்கிறார்கள்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications