பாழடைந்த வீட்டில் “பேசி கொண்டிருந்த”பெண்.. அடுத்தடுத்து வந்த 3 பேர்.. காதலன் கண்முன்னே நடந்த கொடூரம்
கடலூர் : கடலூரில் பாழடைந்த வீட்டில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை திரைப்பட பாணியில் காதலன் கண் முன்னேயே 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் தனியாக நின்று கொண்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கடலூரில் அதிர்ச்சி
அழுது கொண்டே அந்தப் பெண் கூறிய சம்பவம் போலீசாரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று இரவு கடலூர் அருகே கம்மியம்பேட்டை பகுதியில் தனது காதலனுடன் அந்தப் பெண் பாழடைந்த ஒரு வீட்டில் நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென உள்ளே நுழைந்த மூன்று இளைஞர்கள் அவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் பலாத்காரம்
பின்னர் இளம் பெண்ணையும் காதலனையும் ஒன்றாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் எடுத்த மூவரும் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி உள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணின் காதலனை இரண்டு நபர்கள் அடித்து கையை கட்டி பிடித்துக்கொண்ட நிலையில் ஒருவன் இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

கொலை மிரட்டல்
தொடர்ந்து மேலும் இருவரும் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் எனவும் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என கூறி அவர்களை அங்கிருந்து விரட்டி உள்ளனர். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இளம்பெண்ணை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலனை வரவழைத்து விசாரித்த போது அவருக்கும் குற்றவாளிகள் குறித்து தெரியாததால் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களை பிடித்தனர்.

அதிரடி கைது
அவர்கள்தான் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் என இளம் பெண்ணின் காதலன் அடையாளம் காட்டியதை அடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களது செல்போனை கைப்பற்றி அதில் பாலியல் பலாத்காரம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோ இருக்கிறதா என்பது குறித்தும் அவர்கள் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து தமிழகத்தில் பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications