Police Inspector: கடலூர் இன்ஸ்பெக்டர் ஒரேயடியாக பணி நீக்கம்..கடமை தவறினால் இதுதான் நடக்கும்! நடந்தது என்ன?
விழுப்புரம்: புலன் விசாரணையை முறையாக செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டு குற்றச்சாட்டில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் பணியில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சரியாக புலன் விசாரணை செய்யாமலும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமலும், பணியில் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் ஜெயசங்கர் இருந்திருக்கிறார்.
காவல் பணியில் பணியிட மாற்றம், பணி மாற்றம், தற்காலிக பணி நீக்கம் ஆகியன காவல்துறையினருக்கு தண்டனைகளாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் பணி நீக்கம் என்பது அரிதானதாகவே நடக்கும். அந்த வகையில் பட்டியலின வாலிபர் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறப்படும் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினர் மோதல்
விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே சூரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 22). கட்டிட தொழிலாளி. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி இரவு 11 மணியளவில் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் அதே கிராமத்தில் உள்ள மூர்த்தி என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது கை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மூர்த்தி அவர்களை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.
அப்போது மூர்த்தி மற்றும் ராஜா தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் திட்டி தாக்கத் தொடங்கினர். தொடர்ந்து இரு தரப்பினரும், கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தூக்கிட்டு உயிரை மாய்த்த ராஜா
இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து ராஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ராஜா தற்கொலைக்கு காரணமான மூர்த்தி மற்றும் மோகன் ஆகியோரை கைது செய்யக் கோரி போராட்டம் செய்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த கெடார் போலீசார் மூர்த்தி, மோகனை கைது செய்தனர்.
இதற்கிடையே ராஜா புகார் கொடுத்தும் அதனை முறையாக விசாரிக்காததும், மெத்தனமாக செயல்பட்டதாக கூறி அப்போதைய கெடார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயசங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
13 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை
பணி இடைநீக்கத்திற்கு பிறகு மீண்டும் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஜெயசங்கர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணையை தொடங்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் 13 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் 26 அரசு தரப்பு சான்று ஆவணங்களையும் ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பபட்டது. இந்த அறிக்கையினை விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி அருளரசுவிடம் தாக்கல் செய்யப்பட்டது.
பணி நீக்கம் செய்து உத்தரவு
இதன் அடிப்படையில் தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்டது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்த சம்பவத்தில் 2 தரப்பினரும், இரு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அறிந்தும், வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு எந்தவித அறிவுரையும் வழங்காமல் இருந்துள்ளார்.
சரியாக புலன் விசாரணை செய்யாமலும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமலும், பணியில் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் ஜெயசங்கர் இருந்திருக்கிறார். மேலும் ராஜா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடமையை மீறி செயல்பட்டதால்
கடமையை மீறி செயல்பட்டு உள்ளார் என்றும், இதனால் தமிழ்நாடு சார்நிலை காவல் ஆய்வாளர் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதற்காக இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரை பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து டிஐஜி அருளரசு உத்தரவிட்டு இருக்கிறார். சரியாக புலன் விசாரணை செய்யாமல் அலட்சியமாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications