கடலூர் - சிதம்பரம் ரூட்: நாளை தனியார் பேருந்துகள் இயங்காது.. டோல்கேட் கட்டணத்தை எதிர்த்து போராட்டம்!
கடலூர்: கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர ரூ.14,090 நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை புதுச்சேரி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அமைக்கும் பணி முழுவதும் முடிவடையாத நிலையில் கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு சுங்க வரி வசூலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.

சுங்கக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாலும், உள்ளூர் மக்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாததாலும், பல்வேறு தரப்பு மக்களும், சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டோல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், 60 கி.மீ ஒரு டோல்கேட் என்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முழுமையாக விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை பணிகள் முடிந்தவுடன் தான் சுங்கக் கட்டண வசூல் துவக்கப்பட வேண்டும் என்றும், 20 கி.மீட்டருக்கும் குறைவான தூரம் செல்பவர்களுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு விதித்துள்ள அநியாய கட்டணத்தைக் குறைத்திட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் - சிதம்பரம் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர ரூ.14,090 நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் நாளை (டிசம்பர் 23) இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications