இது வள்ளலார் மண்! மதத்திற்கு இடமில்லை.. ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திருப்பி அனுப்பிய மக்கள்! கடலூரில் பரபர
கடலூர்: வடலூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்திய பயிற்சிக்கு அங்கிருந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

கடலூர் மாவட்டம் வடலூரில் சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபை அமைந்துள்ளது. வள்ளலார் மூலம் அமைக்கப்பட்ட சபை ஆகும் இது. எல்லா உயிர்களும் சமம், எல்லா உயிர்களும் சம உரிமையோடு, இன்புற்று வாழ வேண்டும் என்று கூறியவர் வள்ளலார்.
இந்த நிலையில் சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையில் மக்கள் பலர் தினமும் வந்து தியானம் செய்வது, வழிபாடு நடத்துவது வழக்கம்.

வடலூர்
அனைத்து உயிர்களும் சமம், பிறப்பால் யாரும் உயர்வு தாழ்வு கொண்டவர்கள் இல்லை. சாதி, மதம், மொழி போன்ற வேறுபாடுகள் இல்லை. அனைத்தும், அனைவருக்கும் பொது என்று கோட்பாட்டை பின்பற்றி இங்கு சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை பல லட்சம் மக்கள் பின்பற்றி வருகிறார்கள். முக்கியமாக வடலூரை பூர்வீகமாக கொண்ட மக்கள் பலர் இந்த சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபைக்கு தினமும் செல்வதும், அங்கே வழிபாடு, தியானம் செய்வதும் வழக்கம்.

ஜாதி மதம் வேறுபாடு
இந்த நிலையில்தான் அங்கு இருக்கும் மைதானம் ஒன்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திடீரென இன்று காலை பயிற்சிகளை மேற்கொண்டனர். திடீரென அங்கு வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மத ரீதியான உறுதிமொழிகளை மேற்கொண்டனர். அதன்பின் அங்கேயே சிலம்பம் பயிற்சிகளையும் மேற்கொண்டனர். சில நிமிடங்கள் இவர்கள் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மதம் சார்ந்த சில கருத்துக்களையும் இவர்கள் அங்கு பேசி உள்ளனர்.

சிலம்பம்
இவர்கள் காடாம்புலியூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அங்கு தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இப்படி நின்று பயிற்சி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களிடம் சென்ற மக்கள்.. இது வள்ளலார் மண். இங்கு மத பிரிவினைக்கு இடம் இல்லை.

மக்கள் எதிர்ப்பு
சாதி, மதம் ரீதியான கருத்துக்களுக்கு இடம் தர முடியாது. வள்ளலார் அதை எல்லாம் கடந்தவர். இந்த இடம் அமைதியான ஒன்று. இங்கே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வந்து பயிற்சி எல்லாம் செய்ய கூடாது. இங்கிருந்து உடனே வெளியேறுங்கள் என்று மக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்களிடம் கூறி உள்ளனர். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கிருந்து வெளியேறாமல் பிரச்சனை செய்துள்ளனர். இந்த நிலையில் அங்கு வந்த வடலூர் போலீசார், ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடம் பேசி, அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications