"உங்களை நேர்ல பார்க்கணும்.. இதோ வர்றேன்".. இலங்கையிலிருந்து வந்த பெண்.. இருவரையும் ஆளை காணோம்!
காதலனை தேடி பண்ருட்டி வந்த இலங்கை பெண் மாயமாகி உள்ளார்
பண்ருட்டி: "உங்களை நேர்ல பார்க்கணும் ஆசையா இருக்கு" என்று காதலி சொல்லவும், உடனே கிளம்பி வா என்றார் இளைஞர்.. அதன்படி ஃபேஸ்புக் காதலனை சந்திக்க இலங்கையில் இருந்து பண்ருட்டி வந்தார் இளம்பெண்.. இப்போது 2 பேரையும் காணோம்.. எங்கே என்றே தெரியவில்லை.. போலீசார் தேடி கொண்டு இருக்கிறார்கள்!
இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன்... இவர்கள் குடும்பத்துடன் குவைத்தில் வேலைபார்த்து வருகிறார்கள்.
இவரது மகள் ரிஸ்வி பாத்திமா.. 21 வயதாகிறது... இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

பாத்திமா
சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் முபாரக் வேலை பார்த்து வருகிறார்.... இவர்களுக்குள் நாளடைவில் காதலும் ஏற்பட்டது.. ஃபேஸ்புக் மூலமாகவே காதலும் வளர்ந்தது. ஒருநாள் பாத்திமா, தன்னுடைய காதலன் முபாரக்கிடம், "உங்களை நேர்ல பார்க்கணும் ஆசையா இருக்கு" என்று சொல்லி உள்ளார்.. முபாரக்கும் அதற்கு சரி என்று சொல்லி உள்ளார்.

பண்ருட்டி
உடனே பாத்திமா கடந்த 26-ந் தேதி டூரிஸ்ட் விசா எடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு ஃபிளைட் பிடித்து வந்துவிட்டார். பிறகு 2 பேரும் சென்னையில் சந்தித்து கொண்டனர்.. அங்கிருந்து பண்ருட்டி வந்தனர். பாத்திமா பண்ருட்டி வந்தபிறகுதான் அவருடைய பெற்றோருக்கே அங்கு தெரியவந்தது.. உடனடியாக குவைத்தில் இருந்து அவசரமாக அவரது அப்பா கிளம்பி வந்தார்.

புகார்
தமமுக அமைப்பை தொடர்பு கொண்டு நடந்த விவரம் குறித்து எடுத்து சொன்னார்.. இதையடுத்து, காதலனின் அட்ரஸ் வாங்கி கொண்டு, தமுமுக பண்ருட்டி நகர செயலாளர் அலாவுதீனை தொடர்பு கொண்டு பேசினர். இறுதியாக அவரது உதவியுடன் பாத்திமாவின் அப்பா ஜெயினுலாபுதீன், கடலூர் மாவட்ட எஸ்பியிடம் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் தந்தார்.

பரபரப்பு
இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தரப்பட்டுள்ளது.. முபாரக் இப்போதைக்கு அந்த கிராமத்தில் இல்லை.. பாத்திமாவும் காணோம்.. 2 பேரும் எங்கே மாயமாகி விட்டார்கள் என தெரியவில்லை.. அதனால் அவர்களின் போட்டோக்களை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.இலங்கையில் காதலனை தேடி வந்த இப்போது மாயமாகி உள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications