உங்களை நேர்ல பார்க்கணும்.. இலங்கையிலிருந்து வந்து காதலனுடன் வீடு எடுத்து சென்னையில் சிக்கிய பெண்
பண்ருட்டி: "உங்களை நேர்ல பார்க்கணும் ஆசையா இருக்கு" என்று சொல்லி காதலனை தேடி வந்து பண்ருட்டியில் மாயமானாரே இலங்கை பெண்.. அவர் தன் காதலனுடன் சென்னையில் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார்.. இதைதான் போலீசார் கண்டுபிடித்து, அப்பெண்ணையும் மீட்டுள்ளனர்!
இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன்... இவர்கள் குடும்பத்துடன் குவைத்தில் வேலைபார்த்து வருகிறார்கள்.

இவரது மகள் ரிஸ்வி பாத்திமா.. 21 வயதாகிறது... இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் முபாரக் வேலை பார்த்து வருகிறார்.... இவர்களுக்குள் நாளடைவில் காதலும் ஏற்பட்டது..
ஃபேஸ்புக் மூலமாகவே காதலும் வளர்ந்தது. ஒருநாள் பாத்திமா, தன்னுடைய காதலன் முபாரக்கிடம், "உங்களை நேர்ல பார்க்கணும் ஆசையா இருக்கு" என்று சொல்லி உள்ளார்.. முபாரக்கும் அதற்கு சரி என்று சொல்லி உள்ளார்.
உடனே பாத்திமா கடந்த 26-ந் தேதி டூரிஸ்ட் விசா எடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு ஃபிளைட் பிடித்து வந்துவிட்டார். பிறகு 2 பேரும் சென்னையில் சந்தித்து கொண்டனர்.. அங்கிருந்து பண்ருட்டி வந்தனர். பாத்திமா பண்ருட்டி வந்தபிறகுதான் அவருடைய பெற்றோருக்கே அங்கு தெரியவந்தது.. உடனடியாக குவைத்தில் இருந்து அவசரமாக அவரது அப்பா கிளம்பி வந்தார்.
முபாரக் இப்போதைக்கு அந்த கிராமத்தில் இல்லை.. பாத்திமாவும் காணோம்.. 2 பேரும் எங்கே மாயமாகி விட்டார்கள் என தெரியவில்லை.. காதலனின் அட்ரஸ் வாங்கி கொண்டு, தமுமுக பண்ருட்டி நகர செயலாளர் அலாவுதீனை தொடர்பு கொண்டு பேசினர். இறுதியாக அவரது உதவியுடன் பாத்திமாவின் அப்பா ஜெயினுலாபுதீன், கடலூர் மாவட்ட எஸ்பியிடம் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் தந்தார்.
அதனால் அவர்களின் போட்டோக்களை வைத்து போலீசார் தேடி வந்தனர்.. இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.. இன்னொரு பக்கம் முகமது முபாரக்கின் செல்போன் நம்பரை வைத்து டிரேஸ் செய்யப்பட்டது.. அப்போதுதான் சென்னையில் தனியாக வீடு எடுத்து காதலனுடன் பாத்திமா தங்கி இருந்தது தெரியவந்தது.. பின்னர் பாத்திமாவை போலீசார் மீட்டு அழைத்து சென்றனர். பாத்திமா மேஜர்தான்.. இருந்தாலும், அவர் டூரிஸ்ட் விசாவில் இங்கு வந்துள்ளார்.. அதனால் அதிகபட்சம் மாசம்கூட அவரால் இங்கு தங்கியிருக்க முடியும்..
ஆனால், அவரை அவரது அப்பாவுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா? அல்லது காதலனுடன் இங்கேயே தங்குவதற்கு அனுமதி அளிப்பதா? என தெரியாமல் போலீசார் விழித்து வருகின்றனர். இதில் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பது முழு விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும்! எனினும் மகளை இங்கு விட்டு செல்ல அப்பாவுக்கு இஷ்டமே இல்லை.. எப்படியாவது கையோடு அழைத்து செல்லவே விரும்புகிறார்.. காதல் ஜோடி ஜாலியாக இருக்கிறார்கள்.. அப்பாதான் தவித்தபடியே உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications