எடப்பாடியை தினமும் இப்படி கதற விடத்தான் உதயநிதி வந்திருக்காரு.. சுள்ளென வெடித்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: எடப்பாடி பழனிசாமி போன்ற துரோகிகளை தினமும் இப்படிக் கதற விடுகிறாரே.. அதற்குத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் உதயநிதி என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர் தரப்பை கடுமையாகச் சாடிப் பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்று சிதம்பரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

Stalin says that Udhayanidhi came into politics for let Edappadi Palanisamy scream every day

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "மக்கள் எல்லாத்தையும் மறந்துவிட்டு இருப்பார்கள் என்ற நினைத்து வகைதொகை இல்லாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவர்கள்கூட சொல்வதற்குக் கூசும் பொய்யை சர்வ சாதாரணமாகச் சொல்கிறார்.

இந்த லட்சணத்தில் வாய்ச்சவடால்: என்ன பொய் தெரியுமா? பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவராம்! இதையெல்லாம் யாராவது, புயல் காற்றில் உட்கார்ந்து பொரிகடலை சாப்பிடுவார்கள், அவர்களிடம் சொல்லட்டும்... கைக் குழந்தைகள்கூட நம்பாத வடிகட்டின பொய்களை அடித்து விடுகிறார்... பழனிசாமி அவர்களே... நீங்கள் உழைத்து முன்னேறினீர்களா! இல்லை, ஊர்ந்து வந்தீர்களா! என்று ஊருக்கே தெரியும்... இந்த லட்சணத்தில் வாய்ச்சவடால் அவசியம்தானா... உங்கள் வாய்ச்சவடால் எல்லாம் உங்கள் அடிமைக் கூட்டத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அ.தி.மு.கவில் கடைசித் தொண்டன்கூட தலைவராக முடியும் என்று பழனிசாமி சொல்கிறார்... உண்மை என்ன? அதிகமாகக் கப்பம் கட்ட கூடியவர்தான் தலைவராக முடியும் என்று கூவத்தூரில் ஏலம் எடுத்த பழனிசாமி மறக்கலாம்... மக்கள் மறக்கவில்லை! முதலில் சசிகலா, பின்னர் தினகரன், அடுத்து பன்னீர்செல்வம் என்று இவர்கள் முதுகுமேல் எல்லாம் சவாரி செய்து, பதவி வாங்கிட்டு அவர்கள் முதுகிலேயே குத்திய நீங்கள் பேசலாமா?

வரலாறு தெரியாமல் உளற வேண்டாம்: அதே அம்மையார் சசிகலாவைப் பார்த்து "நீ எனக்கு பதவி வாங்கி கொடுத்தியா" என்று ஒருமையில் பேசிய துரோகிதான் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க குடும்பக்கட்சி என்ற பழைய டேப் ரெக்கார்டர் போன்று பாடிக் கொண்டு இருக்கிறார். ஒரு குடும்பத்திற்கே கொத்தடிமையாக இருந்து, அடிமை சேவகம் செய்த வரலாறுதான் அ.தி.மு.க.வுடையது. நாகரிகம் கருதி, ஓரளவுக்குதான் சொல்கிறேன்... நீதியரசர் குன்ஹா அவர்களின் தீர்ப்பைப் படியுங்கள்... உங்கள் கட்சி வரலாறு என்ன என்று தெரிந்துக் கொள்வீர்கள்.

தி.மு.க ஆட்சி ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது என்று அடுத்த உருட்டு உருட்டியிருக்கார் பழனிசாமி. வரலாறு தெரியாத ஞானசூன்யங்களும், தற்குறிகளும்தான் இப்படி பேசுவார்கள். 1976ஆம் ஆண்டில் எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் போட்டதற்காகவும், 1991-இல் இலங்கைத் தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தது என்று சொல்லியும் தி.மு.க ஆட்சியைக் கலைத்தார்கள்! இந்த வரலாறு எல்லாம் தெரியாமல், எதையாவது உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி! கொஞ்சம் நாவடக்கத்தோடு பேசுங்கள்.

விவசாயி அல்ல விஷவாயு: அம்மையார் ஜெயலலிதா இரண்டு முறை ஊழலுக்காகச் சிறைக்குப்போனதால் - ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். முதலமைச்சராகலாம் என்று நினைத்த அம்மையார் சசிகலா ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். காலில் ஊர்ந்து, கப்பம் கட்டுகிறேன் என்று கட்சியை ஏலத்தில் எடுத்துவிட்டு, இப்போது அந்த அம்மையார் சசிகலாவிடம் வட்டித் தகராறு செய்து கொண்டு இருக்கிறவர்தான் பழனிசாமி.

அடுத்து என்னமோ பழனிசாமிதான் இந்த உலகத்திலயே 'கடைசி விவசாயி' போன்று, தனக்கு மட்டும்தான் விவசாயத்தைப் பற்றித் தெரியும் என்பது போன்று பேசிக் கொண்டு இருக்கிறார். பழனிசாமி அவர்களே... மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிக் கொட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு விவசாயி என்று சொல்ல முடியுமா உங்களால்! பழனிசாமி அவர்களே... நீங்கள் விவசாயி இல்லை... விவசாயிகளை அழிக்க நினைத்த விஷவாயு.

இப்படி கதற விடுறாரே உதயநிதி: அடுத்து, "உதயநிதி அரசியலுக்கு வந்ததால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்?" என்று கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. திராவிடத்தின் எதிரிகளையும், திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிசாமி போன்ற துரோகிகளையும் தினமும் இப்படிக் கதற விடுகிறாரே... அதற்குத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் உதயநிதி.

கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்ற சொல்லும் அளவுக்கு 'ஜெனரல் நாலேஜ்' வைத்துக் கொண்டு, "இதெல்லாம் நமக்கு தேவையா? பழனிசாமி..."! சிறிது நாவடக்கத்துடன் பேசுங்கள்! இந்தத் தேர்தலுக்கு உங்கள் பிளான் என்ன? பா.ஜ.க போட்டுக் கொடுத்த பிளான்படி, பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகள் தி.மு.கவிற்கு வராமல் தடுக்கத் தனியாக நிற்கிறீர்கள்! உங்களால் அ.தி.மு.க வாக்குகளையே வாங்க முடியாது... இதில் எப்படி ஓட்டு பிரியும். உங்கள் கட்சிக்காரர்களே, உங்கள் பச்சோந்தித்தனத்தால் நம்பிக்கை இழந்துவிட்டு நிற்கிறார்கள்!

கட்சியை மொத்தமாக லீசுக்கு விட்டவர்: இதில் என்ன கொடுமை என்றால், அண்ணா படத்தைக் கொடியில் வைத்துக் கொண்டு, கட்சி பேரில் திராவிடம் என்று வைத்துக் கொண்டு, திராவிடம் என்றால் என்ன என்று விளக்கம் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு நிற்கிறார். என்னதான் அ.தி.மு.க நமக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றவர்கள் எல்லாம் இருந்த கட்சிக்குப் பழனிசாமி வந்து வாய்த்திருக்கிறார்... கட்சியை மொத்தமாக லீசுக்கு விட்டுவிட்டு மோடியின் 'B-டீம்' ஆக இருக்கிறார். அதனால்தான், தமிழ்நாட்டு மக்கள் அவரை நம்புவதற்குத் தயாராக இல்லை!

அடுத்தடுத்து தோல்வியைப் பரிசாகக் கொடுத்துப் பழனிசாமியைப் புறக்கணிக்கிறார்கள். ஏன் என்றால், பழனிசாமியின் துரோக வரலாறு, வேர்ல்ட் பேமஸ்! சி.ஏ.ஏ. சட்டம் வந்தபோது, பழனிசாமி என்ன செய்தார்? நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல, "அதில் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார்" என்று, அகங்காரமாக பேசி மக்களின் முதுகில் குத்தினார். அதுமட்டுமல்ல, இந்த சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடிய மக்கள் மேல் பெண்கள் குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் லத்தி சார்ஜ் செய்தார்.

ஓடி விட்டார் எடப்பாடி: இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடிய, என் மேலும் - மரியாதைக்குரிய ப.சிதம்பரம் - தோழர் பாலகிருஷ்ணன் - வேட்பாளராக இங்கு உட்கார்ந்திருக்கும் சகோதரர் திருமாவளவன் - சகோதரர் ஜவாஹிருல்லா, தம்பி உதயநிதி உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மேல் ஒரே நேரத்தில் F.I.R. போட்டு மோடிக்கும் - அமித்ஷாவுக்கும், தன்னுடைய விஸ்வாசத்தை வெளிக்காட்டினார் பழனிசாமி! ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல், சி.ஏ.ஏ.க்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தி, இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினோம்.

அதுமட்டுமா, நாம் ஆட்சிக்கு வந்தவுடன், சி.ஏ.ஏ.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம்! அப்போது பழனிசாமி என்ன செய்தார்? எல்லா அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துக் கொண்டு, அவையை விட்டே ஓடிவிட்டார்! நம்மைப் பொறுத்தவரை, இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு மட்டுமல்ல, பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார் பழனிசாமி! மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தார். "எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்" என்று உழவர்களின் துயரத்தைப் பார்த்து ஏளனமாக சிரித்தார். அதை மறைக்க, பச்சை துண்டு போட்டு உழவர்களுக்கு பச்சை துரோகம் செய்தார் பழனிசாமி. இந்தியாவிற்கு எப்படி மோடி இருண்ட ஆட்சியைக் கொடுத்து இருக்காரோ, அது போன்று இருண்ட ஆட்சியைக் கொடுத்தவர் பழனிசாமி!

அரசியல் அமாவாசை: நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடக்கிறது என்பதையே மறந்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலுக்குப் பேசுவது போன்று பேசுகிறார் பழனிசாமி. மோடியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க மோடி மேல் தனக்கு இருக்கும் பயத்தை மறைக்க, இன்னும் 24 அமாவாசைதான் இருக்கிறது! பாருங்கள் என்று, ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார். தினமும் காலையில் எழுந்ததும், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு எத்தனை அமாவாசை இருக்கிறது என்று கணக்கு போட்டுக் கொண்டு இருக்கும், அரசியல் அமாவாசைதான் பழனிசாமி!

தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய அரசியல் அமாவாசை பழனிசாமி அவர்களே... சட்டமன்றத் தேர்தல் வரட்டும்... அ.தி.மு.கவிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே தி.மு.க பறிக்கும்! இது உறுதி! இதை ஆணவத்தில் சொல்லவில்லை! தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த, நாங்கள் செய்யப் போகும் நன்மைகள் மேல் நம்பிக்கை வைத்து சொல்கிறேன்! மக்களைவிட எனக்கு வேறு துணை கிடையாது என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். எனவே, ஏப்ரல் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க, அதற்குத் துணைபோகும் பா.ம.க, தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க ஆகிய துரோகக் கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள்." எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+