’தாம் தூம்’ பாணியில் சம்பவம்..ரஷ்யாவில் சிக்கிய கடலூர் மாணவர்! உக்ரைன் போருக்கு அனுப்ப திட்டம்! ஷாக்
கடலூர்: கடலூரைச் சேர்ந்த மாணவர், ரஷ்யா நாட்டில் மருத்துவப் படிப்பு படித்து வரும் நிலையில், அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என அந்த மாணவன் பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவனை மீட்டு கொடுக்க கோரி பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள பாளையங்கோட்டை கீழ்ப்பாதியில் வசிப்பவர் சரவணன் இவரது மகன் கிஷோர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்காக சென்றுள்ளார். அப்பொழுது இவருடன் எடப்பாடி சேர்ந்த நித்திஷ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். இதன் நடுவே மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து உள்ளனர். இந்நிலையில் படிப்பு செலவிற்காக நண்பர்களுடன் சேர்ந்து பகுதி நேர வேலை வாய்ப்பு தேடி வந்துள்ளனர்.

அப்பொழுது கொரியர் நிறுவனத்தில் வேலை இருப்பதை அறிந்த கிஷோர் மற்றும் நித்திஸ் ஆகியோர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அப்பொழுது வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய்யும் போது அதில் ரஷ்ய நாட்டல் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரஷ்ய காவல்துறையினர், கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் பெற்றோர்கள் அவர்களை முன்ஜாமியில் எடுத்து வர முயற்சி செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதனைக் குறித்து முதல் அமைச்சர், துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்து வந்தனர். திடீரென ரஷ்ய நாட்டு காவல் துறையினர் அவர்களை திடீரென உள் நாட்டில் நடைபெறும் உக்ரின் போருக்கு அழைத்துச் செல்ல வலுக்கட்டாயமாக அவர்களை தனி அறையில் பூட்டி சித்திரவதை செய்து அவர்களிடம் ஆவணத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில்,"எனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. என்னை போருக்கு அனுப்பினால் உயிருக்கு பாதுகாப்பில்லை. எப்படியாவது என்னை மீட்டு விடுங்கள்" என அவர்களின் பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் பெற்றோர்கள் தெரிவிக்கும் போது," எங்களது மகனை ரஷ்யா சிறையிலேயே வைத்து விடுங்கள். போருக்கு அனுப்ப வேண்டாம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், தமிழ்நாடு முதல்வர் அவர்களும், இந்திய தூதரக அதிகாரிகள், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் தலையிட்டு எங்களது மகனை மீட்டு இந்தியா அழைத்து வர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மாணவனை அழைத்து வரவேண்டும் என அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் மாணவனை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications