கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை ஏறி தேவாரம், திருவாசகம் பாடிய சிவனடியார்கள்.. தீட்சிதர்கள் கெடுபிடி

கனகசபையில் ஏறி தேவாரம் பாடும் போது அங்குள்ள தீட்சிதர்கள் கூச்சலிடுகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்று தமிழ் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சிதம்பரம்: தெய்வத்தமிழ் பேரவை அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி போலீஸ் பாதுகாப்புடன் தேவாரம், திருவாசகம் பாடினர். கனகசபையில் ஏறி தேவாரம் பாடும் போது அங்குள்ள தீட்சிதர்கள் கூச்சலிடுகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் அனைத்து தரப்பு மக்களும் எப்போதும்போல் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் நகரத்தில் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சிவனடியார் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்தார். நீதிமன்றம், அனைத்து தரப்பு மக்களும் கனகசபையில் ஏறி வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

அச்சுறுத்தல்.. அமைதியை விரும்புகிறோம்.. பிரதமர், ஜனாதிபதிக்கு சிதம்பரம் பொது தீட்சிதர்கள் மனு அச்சுறுத்தல்.. அமைதியை விரும்புகிறோம்.. பிரதமர், ஜனாதிபதிக்கு சிதம்பரம் பொது தீட்சிதர்கள் மனு

தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு அரசாணை

இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாக ஏராளமான பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். மேலும் அரசாணை வெளியிட தமிழக அரசிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தேவாரம், திருவாசகம் பாடல்

தேவாரம், திருவாசகம் பாடல்

இந்த நிலையில், திங்கட்கிழமை தெய்வத்தமிழ் பேரவையினர் 20க்கும் மேற்பட்டோர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி வழிபட்டனர். அப்போது அவர்கள் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடினர். அங்கிருந்த சில தீட்சிதர்கள் எதிர்க்கும் விதமாக குரலெழுப்பி சத்தமிட்டனர். இதில் சில தீட்சிதர்கள் அவர்கள் பாடட்டும் என அனுமதித்தனர். இதனால் கனகசபையில் கூச்சல் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.

 தமிழ் அமைப்பினர் பாடல்

தமிழ் அமைப்பினர் பாடல்

நேற்றைய தினம் தெய்வத்தமிழ் பேரவை அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினர். முன்னதாக கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்புடன் கனகசபைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீஸ் பாதுகாப்புடன் தேவாரம்

போலீஸ் பாதுகாப்புடன் தேவாரம்

பின்னர் தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினரும், அவர்களுடன் வந்த சிவனடியார்களும் கனகசபை மீது ஏறி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தஞ்சை மணியரசன், பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீட்சிதர்கள் கூச்சல்

தீட்சிதர்கள் கூச்சல்

செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன் கூறுகையில், கனகசபையில் தேவாரம் பாடும் இடத்தில் தீட்சிதர்களின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது என்று கூறினார். கனகசபையில் அனைத்து தரப்பு மக்களும் ஏறி வழிபடலாம் என அரசாணை வெளியிட்ட தமிழக அரசிற்கு நன்றி. இது மகிழ்ச்சி அளிக்கிறது. கனகசபையில் ஏறி தேவாரம் பாடும் போது அங்குள்ள தீட்சிதர்கள் கூச்சலிடுகிறார்கள். இதனை தடுக்க வேண்டும். காவல்துறையினர் அங்கு பணியில் இருந்து பக்தர்கள் மீது அடக்குமுறையை ஏவும் தீட்சிதர்களை தண்டிக்க வேண்டும். சட்ட முறைப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

English summary
More than 50 members of the Dheivathamil Peravai organization climbed the Kanakasabai at the Chidambaram Natarajar Temple and sang Thevaram and Thiruvasakam with police protection. The Deekchithar shout as they climb the Kanakasabai and sing Thevaram. There is a demand to prevent this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X