அறிவாலயத்திற்கு போன கால்! கடலூரில் 23 திமுக கவுன்சிலர்கள் மாயம்! RESORTல் தஞ்சம்! தட்டி தூக்கிய கீதா
கடலூர்: இன்று மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில் கடலூரில் திமுக கவுன்சிலர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் நேற்று முதல்நாள் பதவி ஏற்ற நிலையில் இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மறைமுக தேர்தலுக்கான மாநகர, நகர மற்றும் பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இன்று போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்ப்பு இன்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

கவுன்சிலர் எதிரணி
மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில் கவுன்சிலர்கள் யாரும் எதிரணிக்கு தாவ கூடாது என்பதில் கட்சிகள் உஷாராக இருக்கின்றன. முக்கியமாக எதிர்க்கட்சியான அதிமுக வெற்றிபெற நகராட்சி மன்றங்களை இழந்துவிட கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. இதனால் நகராட்சி கவுன்சிலர்களை பாதுகாக்கும் பணியிலும், அவர்கள் எதிர் கேம்பிற்கு செல்லாமல் தடுக்கும் பணியிலும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் நாள்
தேர்தல் நடக்கும் நாள் அன்று கவுன்சிலர் எதிர் கேம்பிற்கு சென்றால் மறைமுக வாக்கெடுப்பின் போது முடிவுகள் மாறும் வாய்ப்புகள் உள்ளன. நெக் டு நெக் இருக்கும் நகராட்சி பகுதிகளில் இதுபோன்ற கடைசி நேர ட்விஸ்டுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஆளும் கட்சி தரப்பும் கூட தங்கள் கவுன்சிலர்களை பாதுகாப்பாக வைத்து இருக்கும் முயற்சிகளை செய்து வருகிறது.

ரிசார்ட் அரசியல்
அந்த வகையில்தான் கடலூரில் இப்போதே ரிசார்ட் அரசியல் தீவிரம் அடைந்துள்ளது. கடலூர் மாநகராட்சியில் 43 இடங்கள் உள்ளன. இதில் 34 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. திமுக நேரடியாக 27 இடங்களை கைப்பற்றியது. மாநகராட்சியை கைப்பற்ற முழுமையான பெரும்பான்மை அக்கட்சிக்கு உள்ளது. இதையடுத்து கடலூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக சுந்தரி ராஜா அறிவிக்கப்பட்டார். அமைச்சர் எம்.ஆர்.கே.வின் நேரடி ஆதரவாளர் இவர்.

கடலூர் மோதல்
நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி. ராஜாவும் இந்த தேர்தலில் போட்டியிட்டார், தோல்வி அடைந்தார் என்பது வேறு கதை. எம்.ஆர்.கேவிற்கு நெருக்கமானவர் என்பதால் ராஜாவின் மனைவி சுந்தரிக்கு நேரடியாக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதுவே திமுகவில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இங்கு மேயராக கவுன்சிலர் கீதா தான் அறிவிக்கப்படுவார் என திமுகவினர் எதிர்பார்த்த சூழலில், சுந்தரி அறிவிக்கப்பட்டார்.

கடலூர் சுந்தரி
மாவட்டப் பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரன் தனது மனைவி கீதா இங்கே மேயராக களமிறக்க வேண்டும் என்று தீவிரமாக முயன்றார். அதோடு கஷ்டப்பட்டு சென்னை மேலிடத்தில் பேசி கவுன்சிலர் தேர்தலிலும் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். ஆனால் கீதா போட்டியிடுவதை எம்ஆர்கே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடலூர் திமுகவினர் இடையே அதிருப்தி வெடித்தது. இதுதான் பிரச்சனைக்கு காரணம்.

கடலூர் கீதா
அங்கு கடுமையான கோஷ்டி மோதல் இதனால் நிலவி வருகிறது. இதை முன்பே உணர்ந்துதான் அங்கு தேர்தல் முடிவுகள் வந்ததும் வெற்றிபெற்ற இரண்டு சுயேட்சைகளை திமுக தன் பக்கம் வளைத்து போட்டது. இதனால் அங்கு திமுக கூட்டணி பலம் 36ஆக உள்ளது. இந்த பிரச்சனை தேர்தல் நேரத்திலேயே தீவிரமாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே நிர்வாகிகள் இடையே இதனால் கடும் கோஷ்டி மோதல் நிலவியது.

கவுன்சிலர்கள் மாயம்
இந்த நிலையில்தான் கீதாவின் கணவர் குணசேகரன், திமுகவின் 23 கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. எல்லோரும் போனை ஆப் செய்துவிட்டு அப்ஸ்காண்ட் ஆகிவிட்டனர் என்று கூறப்படுகிறித்து. கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தெரிந்து நேற்று இரவு கடலூர் திமுகவில் ஒரே பரபரப்பு. இதனை கேள்விப்பட்டு அறிவாலயம் அதிர்ந்துள்ளது. உடனே அமைச்சர் எம்ஆர்கேவிற்கு போனை போட்டு என்ன நடக்கிறது விசாரித்து இருக்கிறது..

என்ன நடக்கிறது
இன்று காலை 10 மணிக்கு மறைமுக வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அப்போது கவுன்சிலர்கள் அமைச்சரை எதிர்த்து கீதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களா அல்லது அமைச்சரின் ஆசி பெற்ற சுந்தரிக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவில் ஏற்பட்டுள்ள இந்த கோஷ்டி மோதலால் மறைமுக தேர்தலில் என்னாவாகும் என்ற பரபரப்பு கடலூரில் அதிகரித்துள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி












Click it and Unblock the Notifications