திருமாவளவன் சொன்ன "அந்த" வார்த்தை.. கப்சிப் ஆன "சிறுத்தைகள்".. நெல்லிக்குப்பத்தில் என்னதான் நடந்தது?
திருமாவளவன் பிரச்சாரத்தில், விசிகவினர் தர்ணா செய்தனர்
கடலூர்: திருமாவளவன் பிரச்சாரத்தில், விசிகவினரே தர்ணா செய்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.. அப்படித்தான் நேற்று கடலூரில் நடந்துள்ளது.. என்னன்னு பாருங்க..!
நகர்ப்புற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிந்துவிட்து.. இதில் ஆளுக்கு ஒரு பக்கம் தமிழகத்தின் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்..
இந்த முறை திமுக மட்டுமே கூட்டணியாக போட்டியிடுகிறது.. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட பல கட்சிகள் தனித்தனியாகவே களம் காணுகின்றன..

விசிக
அந்த வகையில், விசிக மற்றும் திமுக கூட்டணியை ஆதரித்து திருமாவளவன் மேற்கொண்ட பிரச்சாரம், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.. கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே இந்த முறையும் பாஜகவை விமர்சித்து திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக, திருச்சி, மதுரை, கடலூர் மாவட்டங்களில் திருமாவளவன் பேசிய பேச்சின் தாக்கம் இன்னும் அரசியல் அரங்கில் எதிரொலித்து கொண்டிருக்கிறது.

நெல்லிக்குப்பம்
நேற்றுகூட நெல்லிக்குப்பத்தில் தன்னுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது வைடிப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, விசிக நிர்வாகிகள் சிலர் அங்கு திரண்டு வந்தனர்.. திருக்கண்டேஸ்வரம், சோழவல்லி ஆகிய தங்களது பகுதிகளிலும் வந்து வாக்கு சேகரிக்க வர வேண்டும் என்று சொன்னார்கள்.. ஆனால், கடலூருக்கு பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டி இருப்பதால், அங்கு வர முடியாது என்று திருமாவளவன் சொல்லி உள்ளார்.

சமாதானம்
இதனால், திடீரென சாலையில் அங்கேயே உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.. இதையடுத்து, போலீசார் உடனடியாக வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்... பிறகு, திருமாவளவன் நெல்லிக்குப்பத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, கடலூருக்கு கிளம்பினார்.. நெல்லிக்குப்பம் அண்ணாசாலை அருகே திறந்த வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது மேலும் சில நிர்வாகிகள் மறுபடியும் திருமாவளவனை தங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்யுமாறு அழைத்தனர்.

கடலூர்
இன்றுதான் கடைசி நாள் பிரச்சாரம்.. கடலூரில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்தாக வேண்டும்.. எனவே, இப்போதைக்கு வர முடியாது என்று திருமாவளவன் அவர்களிடமும் பதிலளித்தார்.. ஆனால், அண்ணன் வராமல் போக மாட்டோம்.. அண்ணன் வந்தே ஆகணும்.." என்று வழிமறித்து நின்றனர்.. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட ஆரம்பித்தது.
Recommended Video

திருமாவளவன்
உடனே திருமாவளவன் அவர்களை பார்த்து, "உண்மையான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள்... கட்சியின் கட்டுப்பாட்டை மதித்து நடப்பார்கள்.. அப்படித்தான் செயல்பட வேண்டும்" என்றார்.. திருமாவளவன் இப்படி சொன்னதுமே, நிர்வாகிகள் அடுத்த செகண்டே அமைதியாகிவிட்டனர்.. டக்கென விலகி அவருக்கு வழிவிட்டனர்.. அதன்பிறகு, திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு கடலூர் சென்றார்.. தலைவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்த தொண்டர்களின் விசுவாசம் கடலூரை நெகிழ செய்துவிட்டது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications