பெண்களுக்கு எதிரான வன்முறை.. டான்ஸ் ஆடி கூச்சலிட்ட மகளிரணி.. மிரண்டுபோன தவெக நிர்வாகிகள்!
கடலூர்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் திடீரென உற்சாகத்தில் கூச்சலிட்டு நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளிரணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்திலேயே ஜாலியாக டான்ஸ் ஆடிய வீடியோவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது
மார்ச் 8ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பெண்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். அத்துடன், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாக குற்றம்சாட்டினார்.

அதேபோல் மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் மாற்றுவோம். அதற்கு இந்த மகளிர் தினமான இன்று அனைவரும் உறுதியேற்போம் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இன்று மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டித்து பல்வேறு மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தவெக மகளிரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பின்னர் திடீரென உற்சாகமடைந்து டான்ஸ் ஆட தொடங்கிவிட்டனர். குறிப்பாக பெண்கள் உற்சாகமடைந்து கூச்சலிட்டு கொண்டே டான்ஸ் ஆட தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வீடியோக்களும் வெளியாகி சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
அதேபோல் வேலூரில் தவெக நிர்வாகிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் நிற்பதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மேடை அமைப்பதற்கு காவல்துறையினர் தரப்பில் எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் மேடையை அகற்ற உத்தரவிட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேடை அகற்றப்பட்டது.
-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்!










Click it and Unblock the Notifications