கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் பரிசு கொடுக்கச் சொன்னதே நாங்க தான்... ரூ.5,000 தரச் சொன்னால் ரூ.2,500 தருகிறார்கள் -உதயநிதி

Google Oneindia Tamil News

கடலூர்: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது இரண்டாம் கட்ட விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார சுற்றுப்பயணத்தை கடலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் எழுச்சியை தன்னால் காண முடிவதாகவும் திமுக தான் வெற்றிபெறும் என மக்களே தன்னிடம் நேரடியாக கூறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தாம் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் திரண்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

விடியலை நோக்கி

விடியலை நோக்கி

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் கடந்த மாதம் 20-ம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்வதற்கு போலீஸ் தரப்பில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டது. கூடவே புயல் மழை என இயற்கை பேரிடர் காரணமாகவும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

இரண்டாம் கட்டம்

இரண்டாம் கட்டம்

இதனிடையே கடலூரில் இன்று தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பொங்கல் பரிசை திமுக விமர்சிப்பதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி, பொங்கல் பரிசு கொடுக்கச் சொன்னதே நாங்க தான், ரூ.5,000 தரச் சொன்னால் ரூ.2,500 தருகிறார்கள் எனக் கூறினார்.

ஏன் அஞ்ச வேண்டும்?

ஏன் அஞ்ச வேண்டும்?

மேலும், இப்போதும் கூறுகிறோம் மக்களுக்கு ரூ.2,500 போதாது ரூ.5,000 வழங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். கடந்தமுறை பிரச்சாரம் செய்த போது தன்னை ஒரு தீவிரவாதியை நடத்துவது போல் போலீஸ் நடத்தியதாகவும் ஆனால் இந்தமுறை அத்தகைய கெடுபிடிகள் இல்லை எனவும் உதயநிதி கூறினார்.மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொறுத்தவரை கலைஞரின் நண்பர் என்றும் அவரைக் கண்டு தாங்கள் ஏன் அஞ்ச வேண்டும் எனவும் வினவினார்.

கருணாநிதி ஆட்சி

கருணாநிதி ஆட்சி

ரஜினிகாந்த் கட்சியே தொடங்காத போது அவரைப் பற்றி பேச தேவையில்லை எனக் கூறினார். இதனிடையே பேட்டியை முடித்து எழுந்த அவரிடம், எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று சொல்லி வாக்குக் கேட்கிறார்களே கருணாநிதி ஆட்சி என்று சொல்லி யாரும் வாக்கு கேட்காதது ஏன் என செய்தியாளர் ஒருவர் வினவினார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், கலைஞர் ஆட்சியில் நிறைய வேலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

English summary
Udhayanidhi stalin says, We are the ones who told to give Pongal gift
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X