கடலூரில் மீனின் வலையில் 30 கிலோ முதலை குட்டி! கிட்ட பார்த்தால் 5 அடி நீளம்! ஆச்சரியத்தில் சிதம்பரம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குளத்தில் அங்குள்ள சிலர் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்கள்.. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரகம் ரகமாக மீன்கள் கிடைக்கும், அதை சமைத்து சாப்பிடலாம் என்று ஆசை ஆசையாக இவர்கள் குளத்தில் மீன் பிடித்துள்ளனர்.. அப்போதுதான் இந்த ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி கொண்டும் உள்ளது. என்ன காரணம்?
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடுர் கிராமம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமமாகும்... இங்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பெரிய குளம் ஒன்று உள்ளது..

கிராம மக்களின் தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது இந்த குளம்தான்.. இந்த குளத்தில் குளிப்பதும், துணி துவைப்பதும், கால்நடைகளை குளிப்படுத்துவதும் செய்து வருகிறார்கள்..
30 கிலோ எடை
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில், சில மீனவர்கள் வழக்கம்போல் குளத்தில் மீன்பிடிக்க வலை விரித்துள்ளனர்.. அதில் ஏதோ ஒன்று "வெயிட்டாக" சிக்கவும் அனைவரது முகத்திலுமே பயங்கர சந்தோஷம்..
எப்படியும் பெரிய மீன்கள் சிக்கி இருக்கும் என்று வலையை இழுத்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. ஆம், சுமார் 5 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட முதலைக்குட்டி வலையில் சிக்கியதை கண்டனர்.. முதலில் இதை பெரிய வகை மீன் என்றுதான் நினைத்துள்ளனர்.. பிறகு உற்றுப் பார்த்தபோதுதான் அது முதலைக்குட்டி என்பதை தெரிந்து மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முதலைக்குட்டி
கிராம மக்கள் உடனடியாக ஒன்றாக சேர்ந்தும், முதலைக்குட்டியை வலையுடன் சேர்த்து கவனமாக கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு வனத்துறையிடம் உடனடியாக தகவல் தந்தனர்.. சில நிமிடங்களில் வனத்துறையினர், அந்த குளத்துக்கு வந்து, முதலைக்குட்டியை மீட்டு பாதுகாப்பாக வக்கிரமாரி ஏரியில் கொண்டுபோய் விட்டனர். .
ஆனால், கிராம மக்களுக்கு இப்போதுதான் கலக்கம் அதிகமாகிவிட்டது.. காரணம், முதலை குட்டி குளத்தில் இருக்கிறது என்றால், பெரிய முதலை அந்த குளத்தில் இருப்பதாகத்தானே அர்த்தம்? தினந்தோறும் புழங்கி வரும் குளத்தில் பெரிய முதலை இருப்பது அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. எப்படியாவது அந்த பெரிய முதலையையும் பிடித்துவிடுங்கள் என்று கிலியுடன் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முதலைப் பண்ணைகள்
இந்த சம்பவம் புதியதல்ல. முதலைகளை சர்வ சாதாரணமாக பார்க்க வேண்டுமானால் சிதம்பரம் பகுதியில் ஈஸியாக பார்க்கலாம். இங்கு நீர்நிலைகள் மட்டுமல்லாமல் புதர்களில் முதலைகள் மறைந்து வாழ்வதுண்டு.. அதனால்தான் கடந்த 20 வருடங்களாகவே சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை எழுந்துவருகிறது.
ஆனால், அதிமுக, திமுக என அரசுகள் மாறிய போதும் நிலையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. முதலை பண்ணையும் இதுவரை வைக்கவில்லை மக்கள் வருத்தத்துடன் சொல்கிறார்கள்..
பெரிய முதலை
இப்போது தினசரி பயன்படுத்தும் குளத்தில் ராட்சச முதலை இருப்பதால், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அதனை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என கோரிக்கையிட்டு வருகின்றனர்.
மீனுக்கு விரித்த வலையில் முதலை குட்டி சிக்கியதும், முதலை குட்டி உள்ளதால் பெரிய முதலையை விரைவில் பிடித்துவிடுங்கள் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதும், சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகின்றன..!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications