விருத்தாச்சலம் பஸ் ஸ்டாண்டில்.. சைஸா நின்ற ராஜாமணி.. நைசா வந்த 3 பேர்.. இப்ப மேடம், ஜெயிலில் 1,2,3,4
கடலூர்: விருதாச்சலம் கோயிலுக்குள், தினமும் 4 பெண்கள் வந்து போயிருக்கிறார்கள்.. இவர்கள் இப்போது போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளனர். என்ன காரணம்?
திட்டக்குடி வதிஷ்டபுரத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி.. இவர் கடந்த 19ம் தேதி, தன்னுடைய மகளுடன் விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளார்.. அங்கே காவனூருக்கு செல்லும் அரசு பஸ் வந்து நிற்கவும், தன்னுடைய மகளை அந்த பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு கீழே இறங்கினார்..

திடீர் மாயம்: அப்போது, தன்னுடைய கழுத்தில் கை வைத்து பார்த்தபோது, 5 பவுன் செயின் மாயமாகியிருந்தது.. இதனால், அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, பஸ் ஸ்டாண்டு முழுக்க தேடினார்.. எங்கேயும் செயின் கிடைக்கவில்லை. இதனால், விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார்.
போலீசாரும் இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. பஸ் ஸ்டாண்டில்தான், செயின் திருடு போயிருக்கிறது என்பதால், பஸ்களில் கைவரிசையை காட்டும் வழக்கமாக நபர்கள்தான், இந்த காரியத்தையும் செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். எனவே, இதற்காகவே ஒரு போலீஸ் டீம் களமிறக்கப்பட்டது. இவர்கள் விருதாச்சலம் பஸ் ஸ்டாண்டில் தீவிர கண்காணிப்பில் இறங்கினார்கள்.
விருதாச்சலம்: அப்போதுதான், விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலுக்கு, 4 பெண்கள் தினமும் வந்துபோவது தெரியவந்துள்ளது.. இந்த 4 பெண்களும் தினமும், நைட் நேரத்தில் வந்து தங்கிவிட்டு போவதும் போலீசுக்கு தெரியவந்துள்ளது. அதனால், இந்த கோயில் பகுதியில் ரோந்து பணி தீவிரமானது. இதில், முதலில் ஒரு பாட்டி சிக்கினார்.
இந்த பாட்டியிடம் விசாரித்தபோது, ராஜாமணி என்ற பெண்ணை பற்றின தகவல் கிடைத்தது. திருவெறும்பூர் காவிரி நகரை சேர்ந்தவராம் இந்த ராஜாமணி.. 55 வயதாகிறது.. இவருக்கு செல்வி, உமா, கஸ்தூரி என்ற 3 நெருங்கிய தோழிகள் உள்ளார்கள்.
இவர்கள் 4 பேருமே திருட்டு தொழிலை நீண்ட காலமாகவே செய்து வருகிறார்களாம். குறிப்பாக நெரிசல் மிகுந்த பஸ்களில், கைவரிசையை காட்டுவதே முக்கிய வேலையாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
புளியந்தோப்பு: அதற்கு பிறகு, குற்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்த்ததில், வடலூர், செங்கல்பட்டு. சிதம்பரம், மந்தாரக்குப்பம், தஞ்சாவூர், திண்டுக்கல், பழனி, சென்னை பூக்கடை, மாமல்லபுரம், நாமக்கல், புளியந்தோப்பு, சிவகங்கை, காரைக்குடி வடக்கு, தஞ்சாவூர் தாலுகா, பாபநாசம். தஞ்சாவூர், திருச்செந்தூர், கொள்ளிடம், மணச்சநல்லூர், விழுப்புரம் இப்படி எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலுமே, இந்த 4 பேர் மீதும் திருட்டு கேஸ்கள் இருப்பது தெரியவந்தது.

அதைவிட முக்கியமாக, ஒவ்வொருவர் மீதும், குறைந்தது 25 கேஸ்களாவது இருக்கிறதாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட போலீசாருக்கே தலைசுற்றிவிட்டது. இவர்கள் எல்லாருக்குமே கல்யாணமாகிவிட்டது.. கணவன்மார்களும், குடும்பமும் உள்ள நிலையில், வெளியூரில் வேலை பார்ப்பதாக நம்பவைத்து, இப்படி கிளம்பி வந்துவிடுவார்களாம்..
அதிரடி விசாரணை: கிடைக்குமிடங்களில் இரவு நேரத்தில் தங்கிக்கொண்டு, காலையில் பிஸியான நேரம் பார்த்து, பஸ்களில் ஏறி கைவரிசையை காட்டி வந்துள்ளனர். இந்த கும்பலுக்கு லீடராக ராஜாமணி இருந்துவந்துள்ளார். இப்போதைக்கு 10 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ள போலீசார், அந்த பெண்களிடம் தொடர் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications