"ஏய்.. வெளியே ஓடு, யாரு உள்ளே விட்டது".. சாதியை சொல்லி தீட்சிதர்கள் பெண்ணை திட்டினார்களா.. என்னாச்சு
தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய என்ன காரணம்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் சிற்றம்பல மேடைக்கு பக்தர்கள் செல்வது கோயில் நிர்வாகத்தால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான கணேஷ் தீட்சிதர் என்பவர் சில தினங்களுக்கு முன்பு சாமி கும்பிட சென்றிருக்கிறார்..

சரமாரி தாக்குதல்
அப்போது, சக தீட்சிதர்கள் அவரை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்துள்ளனர்.. அவரை தாக்கியும் உள்ளனர். இதனால், அவர் போலீசார் புகார் தந்தார்.. அதன்பேரில் சிதம்பரம் நகர போலீசார் 3 தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அடுத்தநாளே, அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் பக்தரை சாமி கும்பிட கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீது அழைத்து சென்றார்.

ஆபாச பேச்சு
அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது.. உடனே அவரும் சிதம்பரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்ஷன் தீட்சிதர்
இதற்கு பிறகு, கணேஷ் தீட்சிதரும், அவரது மகன் தர்ஷன் தீட்சிதரும் மறுபடியும் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார்கள்.. அப்போதும் சக தீட்சிதர்கள் அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது... இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்து தர்ஷன் தீட்சிதர் சொல்லும்போது, "சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை என கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.. ஆனால், சோழர்கள் கட்டிய நடராஜர் கோயிலில் கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என்று தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?

சோழ மன்னர்கள்
நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் எப்படி சுவாமி தரிசனம் செய்கிறார்களோ, அதேபோல் பக்தர்களும் தரிசனம் செய்ய வேண்டும். கோயிலில் நடைபெறும் சில அநியாயங்களை நானும் என்னுடைய அப்பாவும் தட்டிக் கேட்பதால், எங்களை கோயில் நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். அடிக்கிறார்கள்... பக்தர்களை கனகசபையில் ஏற்றக் கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளனர்.. இது சோழ மன்னர் கட்டிய கோயில்... காலம் காலமாக கனகசபையில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்... இந்த நடைமுறை மறுபடியும் வர வேண்டும்" என்றார்.
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தீயசக்திகள்
இதனிடையே, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் சார்பில் ஐயப்ப தீட்சிதர் என்பவர் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சக்திகணேச தீட்சிதர், அவரது மகன் தர்ஷன் தீட்சிதர் ஆகியோர் கோயிலுக்கும் தீட்சிதர் சமூகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சில துஷ்பிரயோகமான செயல்களை தீய சக்திகளுடன் சேர்ந்து செய்து வருகின்றனர்.

சிற்றம்பல மேடை
கோயிலில் எந்தவித தீண்டாமையும் இல்லை... கிறிஸ்தவ மதத்தினரும் வருகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தினரும் வருகிறார்கள். இந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு பக்தர்களும் கோயிலுக்கு வருகிறார்கள். யாரையும் தவறாக பேசுவது இல்லை... ஆனால், கோயிலின் நலன் கருதி சில சட்ட திட்டங்கள் வகுத்து கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டு, எல்லோரும் அதை கடைபிடித்து வருகிறார்கள்.

தர்ஷன் தீட்சிதர்
தீட்சிதர்கள் சக்தி கணேசன், தர்ஷன் மட்டும் விதிமுறைகளை மதிக்காமல் சம்பந்தம் இல்லாத பெண்களை கனகசபைக்கு அழைத்து வருகிறார்கள்... அதுபோன்ற ஒரு சம்பவத்தில், தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலில் அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு பெண் தவறுதலான புகாரை தெரிவித்து இருக்கிறார்.. கோயிலில் நடந்த நிர்வாகக் கூட்டத்தில், நிர்வாகத்துக்கு எதிராக கருத்துகளை கூறியதற்காக தர்ஷன் தீட்சிதருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்த தவறினால் மீண்டும் சஸ்பென்ட் செய்யப்படுவார்.

நடவடிக்கை
இவ்விவகாரத்தில் சக்தி கணேசன் தீட்சிதர், காவல் நிலையத்தில் தன்னை தாக்கியதாக பொய் புகார் தெரிவித்துள்ளார்... பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறவேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது... கோயில் நிர்வாகத்தில், பூஜையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவும் உள்ளது" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications