இரவு 10.30 மணி.. 4 இடங்களில் ரத்தம்.. சிசிடிவி.. கள்ளக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? பின்னணி

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கள்ளக்குறிச்சியில் மாணவி பலியானது எப்படி? கடந்த 5 நாட்களாக நடைபெற்றது என்னென்ன? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.

இவர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அங்கு ஏற்கனவே மாணவிகள் பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த மாணவி மரணம் தொடர்பாக இது வரை வெளியாகி இருக்கும் தகவல்கள் என்னென்னெ என்று பார்க்கலாம்

1) இந்த மாணவி பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 12ம் வகுப்பு படித்து வந்தார். 6ம் வகுப்பு படிக்கும் போது அந்த பள்ளியில் இவர் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் 11ம் வகுப்பிற்கு வேறு பள்ளி மாற முயன்றுள்ளார். ஆனால் டிசி கொடுக்காததால் அங்கேயே படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2) 12ம் வகுப்பு பள்ளிகள் தொடங்கிய பின், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜூலை 1ம் தேதி ஹாஸ்டலில் சேர்ந்துள்ளார்.

3) ஜூலை 13ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மாணவி உடலை பள்ளி ஹாஸ்டலுக்கு கீழே காவலர் பார்த்து உள்ளார். உடனே அவரின் பெற்றோருக்கு தகவல் சென்றது.

ஹாஸ்டல்

ஹாஸ்டல்

4) முதலில் பெற்றோருக்கு மாணவிக்கு காயம் என்று தகவல் சொல்லி மருத்துவமனைக்கு வர சொல்லி உள்ளனர். அதன்பின் மாணவி இறந்துவிட்டதாக அதே நாள் கூறப்பட்டுள்ளது. 13ம் தேதி காலை மாணவியை அவரின் பெற்றோர் பார்க்க செல்லும் முன் மாணவி இறந்துவிட்டதாக தகவல் சென்றுள்ளது.

5) மாணவி உடலை பார்த்த பெற்றோர், அதில் தலையில், மார்பில் ரத்த காயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சந்தேக மரணம் என்று புகார் வைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிந்து உள்ளனர்.

6) உடனே மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

7) நேற்று முதல்நாள் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரின் ஸ்கூல் யுனிபார்மில் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை என்று மொத்தம் 4 இடங்களில் ரத்த கரை இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு தலையில், மூக்கில், தோள்பட்டையில் அடிபட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

8) அவரின் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் புதிய காயங்கள்தான். பழையது கிடையாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக அளவில் ரத்தம் வெளியேறியது, காயங்கள் காரணமாக ஏற்பட்ட ஷாக் ஆகியவைதான் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது

9) இதையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் சிசிடிவி கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளனர்.

போராட்டம்

போராட்டம்

10) இதனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

11) இது தொடர்பாக போலீஸ் வெளியிட்ட செய்தியில், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி விழுந்துள்ளார். அது லேடிஸ் ஹாஸ்டல் என்பதால் அங்கு கேமரா இல்லை. இதனால் அங்கு எதுவும் பதிவாகவில்லை. இன்னொரு பக்கம் மாணவியின் உடலை காலையில் விடுதி காவலர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் மட்டும் கீழே இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது, என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 எப்போது மரணம்?

எப்போது மரணம்?

12) முதல் கட்ட விசாரணையின் படி 12ம் தேதி இரவு 10.30 மணிக்கு பின்பாக மாணவி மாடியில் இருந்து விழுந்து இருக்கலாம். இறப்பு நேரம் 10.30 என்று போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. கீழே இருந்த மாணவியின் உடலை அதிகாலை பள்ளி வாட்ச் மேன் பார்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காலையில் விளக்குகளை அணைக்க வந்த போதுதான் உடலை காவலர் பார்த்துள்ளார்.

13) அங்கு மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சிறு சிறு போராட்டங்கள் நடைபெற்றன. இன்று 500க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் முன் போராட்டம் செய்தனர். பள்ளியை மொத்தமாக மூட வேண்டும் என்று கூறி போராட்டம் செய்தனர். அதோடு தாளாளரை கைது செய்ய வேண்டும். உடனே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

கலவரம்

கலவரம்

14) இந்த போராட்டம் இன்று கலவரத்தில் முடிந்த நிலையில் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் துரத்தியடிக்கப்பட்டன. இந்த போராட்டத்திற்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மாணவியின் குடும்பம் தெரிவித்துள்ளது.

15) இந்த போராட்டம் வாட்ஸ் ஆப் மூலம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. மொத்தம் 500 பேர் பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களை தொடங்கி அதில் போராட்டம் செய்துள்ளனர். யாரோ இதற்கு பின் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Kallakurichi பள்ளி மாணவியின் தாய் சொல்வது என்ன? | Kallakurichi School Girl Case | TamilNadu
    உண்மையான காரணம் என்ன?

    உண்மையான காரணம் என்ன?

    16) டிஐஜி தலைமையில் மாணவி மரணம் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கலவரம் நடந்த இடத்திற்கு சட்ட ஒழுங்கு ஏடிஜிபி தாமரை கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேற்கு மண்டல ஐஜி தேன்மொழியும் அங்கு சென்றுள்ளார்.

    17) தற்போது இந்த வாட்ஸ் ஆப் குழுக்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது., குழுக்களை தொடங்கியது யார், அட்மின் யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது

    18) மாணவியின் மரணத்திற்கு உண்மையான காரணம் தெரியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+