"சங்கி கும்பல்".. எதிரி எதிர்பார்த்தது 2ம் தூத்துக்குடி.. கள்ளக்குறிச்சி பற்றி டிஆர்பி பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பின் இருப்பது சங்கி கும்பல் என்று திமுக எம்எல்ஏ மற்றும் ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Kallakurichi Collector Sridhar விளக்கம் | Kallakurichi School Girl விவகாரம் | *TamilNadu

    கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று மாபெரும் போராட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.

    இதையடுத்து நேற்று நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. பல பேருந்துகள் எரிக்கப்பட்டன, போலீசார் தாக்குதலுக்கு உள்ளானார்கள். ஆனாலும் போலீசார் நேற்று மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை.

     யார் காரணம்?

    யார் காரணம்?

    இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் துரதியடிக்கப்பட்டன. இந்த போராட்டத்திற்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மாணவியின் குடும்பம் தெரிவித்துள்ளது. இந்த கலவரதத்திற்கு வேறு சிலர் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

    திமுக எம்எல்ஏ

    திமுக எம்எல்ஏ

    இந்த நிலையில்தான் திமுக எம்எல்ஏ மற்றும் ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா இந்த கலவரம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு,சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த துயரமான சம்பவத்தில் கூட கேவலமான அரசியல் ஆதாயம் தேடியிருக்கும் கயவர்கள் மீதும் "நடவடிக்கைகள்" தேவை ! அனைத்து குற்றவாளிகளும் நிச்சயம் சட்டபடி தண்டிக்கப்படுவார்கள்.

    பணியை துவங்கினர்

    பணியை துவங்கினர்

    சம்பவம் நடந்த அன்றே காவல் துறையினர் அவர்களது பணியை துவங்கியுள்ளனர். அமைச்சர் கணேசன் அவர்களும் உயர் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரித்தனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமிழகத்தில் மேலும் ஒரு தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த காவிக்கூட்டம் துடிக்கிறது.

    அசாதாரண சூழல்

    அசாதாரண சூழல்

    பள்ளி நிர்வாகம், சம்பவத்தை சமூக வலைதளங்களில் தூண்டிவிட்டு கலவரச் சூழலை உருவாக்கியவர்கள், இதை காரணமாக சொல்லி தமிழகம் எங்கும் பள்ளிகள் இயங்காமல் இருக்கும் சூழலை உருவாக்க முயன்ற தற்குறிகள் என்று அனைவருமே சங்கி மந்திகள் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன !!! ... இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் எதையும் தீர விசாரிக்காமல் பதிவிடுவதை தவிர்க்குமாறு விங்கிற்கு அறிவுறுத்தப்பட்டது.

    அவசரம் வேண்டாம்

    அவசரம் வேண்டாம்

    இச்சம்பவம் குறித்து அவசரகதியில் பதிவிடக்கூடாது என உடன்பிறப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எதிரி எதிர்பார்த்தது "இரண்டாம் தூத்துக்குடி" இதில் யாருக்கும் சந்தேகமில்லை... நியாயமான விசாரணை நடைபெறும்.மாணவியின் குடும்பத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.இந்த சம்பவத்தில் அரசியல் லாபத்திற்காக கீழ்தரமான செயல்களை செய்திருக்கும் அரசியல் சாக்கடைகளுக்கு மக்கள் பாடம் கற்பிப்பது உறுதி. நிலைமையை தடம் பிறழாமல் மிக ஜாக்கிரதையாக கையாண்ட முதல்வருக்கு நன்றிகள் 🙏🏾...

    சமூக வலைத்தளம்

    சமூக வலைத்தளம்

    சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் போடப்பட்ட அனைத்து பதிவுகளையும்
    @ITWreports தொடர்ந்து பதிவிறக்கி வருகிறது.அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும். கலவரத்தை தூண்டிய அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும். மேலும் பதிவுகள் இருந்தால் @ITWreportstag செய்யவும். #திராவிட_மாடல் ஆட்சியில் இன்னொரு "தூத்துக்குடி சம்பவத்துக்கு" ஒரு போதும் இடம் கிடையாது.தூண்டி விடும் சங்கி மந்திகளை தொடர்ந்து நாம் அம்பலப்படுத்துவோம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+