மச்சினிச்சி அடங்கல.. ஒரு நொடிகூட யோசிக்காமல் கிச்சனுக்கு வேகமாக ஓடிய கணவர்.. கடலூர் கலங்கிடுச்சு
கடலூர்: சொல் பேச்சை கேட்காத பெண்ணால், கடும் கோபம் அடைந்துள்ளார் ரமேஷ்.. என்ன நடந்தது கடலூரில்?
கடலூர் முதுநகர் அருகே உள்ளது சோனங்குப்பம்.. இங்கு வசித்து வருபவர் ரமேஷ்.. 37 வயதாகிறது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.. இவரது மனைவி பெயர் இந்துமதி.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆனால் ரமேஷ், இந்துமதியின் தங்கை சூர்யா என்ற பெண்ணையும் விரும்பினார்.. ஒருகட்டத்தில் சூர்யாவையும் 2வதாக கல்யாணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
முதுநகர்: இதற்கு பிறகும் ரமேஷ் தொடர்ந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இப்போது 33 வயதாகும் சூர்யாவுக்கு, முதுநகரில் இன்னொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, அது கள்ளக்காதல் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயம் வெளிநாட்டிலிருக்கும் ரமேஷூக்கு தெரியவந்துள்ளது.. இதனால் சூர்யாவுக்கு போன் செய்த ரமேஷ், பலமுறை கண்டித்திருக்கிறார்.. ஆனாலும், சூர்யா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று தெரிகிறது...
பஞ்சாயத்து: இதற்கு பிறகு, ரமேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்... அப்போது, சொந்தக்காரர்களிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றார்.. பிறகு அவர்கள் அனைவரும் சமாதானம் பேசி, சூர்யாவை ரமேஷூடன் ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
குடும்பத்தினர் அறிவுறுத்தியதால், கடலூர் முதுநகரிலேயே ஒரு வீட்டில் சூர்யாவும், ரமேஷும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்... ஆனாலும், இவர்களுக்குள் தகராறு அடங்கவில்லை..
நேற்று சூர்யாவுக்கும் ரமேஷுக்கும் கடுமையான சண்டை நடந்துள்ளது.. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், கிச்சனிலிருந்த கத்தியை எடுத்து வந்து, சூர்யாவை கண்மூடித்தனமாக வெட்டினார்.. ரத்த வெள்ளத்தில் சரிந்து, சூர்யா உயிரிழந்தார். இதைப்பார்த்ததுமே ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்..
பரபரப்பு: இதற்கு பிறகு, கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் விரைந்து வந்து, சூர்யாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்ய கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... ஆனால், ரமேஷ் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. அவரை தேடி கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications