என்.எல்.சி.தமிழ்நாட்டுக்கு தேவையா? கலெக்டர் விளக்கம் யாருக்கு வேண்டும்? அன்புமணி ராமதாஸ் ஆக்ரோஷம்!
கடலூர்: என்.எல்.சி.தமிழ்நாட்டுக்கு தேவையா? என்றும் கலெக்டர் விளக்கம் யாருக்கு வேண்டும்? எனவும் அன்புமணி ராமதாஸ் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார்.
என்.எல்.சி. ஏன் தேவையில்லை என்பது குறித்தும் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் விவரம் குறித்தும் விலாவரியாக பேசியிருக்கிறார் அன்புமணி. அவர் பேசியதன் விவரம் வருமாறு;
நிலத்தடி நீர்: ''நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் போராட்டம் ஒட்டுமொத்தமான என்எல்சி நிர்வாகத்திற்கு எதிரான ஒரு போராட்டம். எங்களது நோக்கமே என்எல்சியின் பிடியில் இருந்து, கடலூர் மாவட்டம் மற்றும் சுற்றி இருக்கின்ற 4 மாவட்டங்களை காப்பாற்ற வேண்டும் என்பது தான். என்எல்சி நிறுவனம் 1956 ல் தொடங்கப்பட்ட நாளில் அந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் 8 அடியில் இருந்தது. இன்றைக்கு அந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் 800 அடியில் இருந்து ஆயிரம் அடிக்கு போயிருக்கிறது.
இதற்கு ஒரே ஒரு காரணம் என்எல்சி நிர்வாகம் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிந்து கடலில் அனுப்பி அதற்கு கீழே இருக்கின்ற அந்த லிக்னைட்டை எடுத்து எரித்து சாம்பலாக்கி நமக்கு கொஞ்சம் மின்சாரம் கொடுக்கிறது. அந்த மாவட்டத்தையே அழித்து விட்டது. காற்று மாசு ஆகி விட்டது. நிலம், நீர் அழிந்து விட்டது. அதில் இருந்து காப்பாற்ற வேண்டும். இந்த மாவட்ட ஆட்சியர் கொடுக்கிற விளக்கம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். அளிச்சது போதும், தமிழ்நாட்டிலிருந்தே என்.எல்.சியை வெளியேற்ற வேண்டும்.''

தமிழ்நாட்டுக்கு தேவையா?: ''என்னுடைய முதல் கேள்வி என்எல்சி நிர்வாகம் தமிழ்நாட்டிற்கு தேவையா ?. நான் சொல்லும் வாதங்கள் எல்லாம் தமிழ்நாடு இன்றைக்கு மின்மிகை மாநிலமாக மாறி விட்டது. இதை நான் மட்டும் சொல்லவில்லை அமைச்சர் சொல்கிறார். தமிழ் நாட்டின் ஒருநாள் மின்சாரத் தேவை 18 ஆயிரம் மெகாவாட். தமிழ்நாட்டின் உற்பத்தி 36 ஆயிரம் மெகாவாட். தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் அவர் சொன்னது, நாங்கள் இன்று மின்மிகை மாநிலமாக ஆகிவிட்டோம். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நாங்கள் பக்கத்து மாநிலத்திற்கு வித்துகிட்டு இருக்கிறோம்.
ஒரு யூனிட் 9 ரூபாய் 50 பைசாவிற்கு வித்துகிட்டு இருக்கிறோம். அந்த நிலைக்கு இன்று தமிழ்நாடு போய்விட்டது. என்எல்சி நமக்கு கொடுப்பது வெறும் 800 மெகாவாட் அவ்வளவுதான். 36 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி, அதில் என்எல்சியின் பங்களிப்பு வெறும் 800 மெகாவாட். என்எல்சி இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடுமா என்ன ? நிச்சியமா கிடையாது. இது மட்டுமல்ல தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் 2030 க்குள் நாங்கள் தமிழ் நாட்டின் மின்சார உற்பத்தி 50 விழுக்காடு புதுப்பிக்கத் தக்க எரிசக்தியாக இருக்கும் என சொல்கிறார்கள். பிறகு எதற்கு இன்றைக்கு என்எல்சிக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கிறீர்கள்.''
விவசாய அமைச்சர் : ''என்எல்சி அப்ப காசு கொடுத்தாங்க, இப்ப காசு கொடுத்தாங்க.. அதெல்லாம் வாதம் கிடையாது. என்எல்சி இவ்வளவு கொடுக்குறாங்க, அப்படி கொடுக்குறாங்க அதெல்லாம் வாதம் கிடையாது. என்எல்சி நிலத்தையும், மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் அழிச்சிட்டு இருக்காங்க. நேற்று அந்த காட்சியைப் பார்த்து இருப்பீங்க, கதிர் விடும் நெல்லை அழிப்பது கருவில் இருக்கும் குழந்தையை அழிப்பது போல , எவ்வளவு வன்மம் அது. இன்னும் அரசு அமைதியா இருக்கு. முதலமைச்சர் அமைதியா இருக்காரு. நான் விவசாயிகளின் தோழன் என முதலமைச்சர் சொல்கிறார். என்ன தோழன் எதற்கு வேளாண் நிதிநிலை அறிக்கை போடுறீங்க. அந்த மாவட்டத்தில் விவசாய அமைச்சர் என்ன பன்னிட்டு இருக்காரு.''
அமைச்சருடைய வேலை என்ன?: ''அமைச்சருடைய வேலை என்ன? விவசாயத்தையும் காப்பாத்தனும், விவசாயிகளையும் காப்பாத்தனும். அதைவிட்டிட்டு நிலத்தை அழிச்சிட்டு இருக்காங்க. தேவையே இல்லை. என்எல்சியை தனியார்கிட்ட விக்க முடிவு பன்னீட்டாங்க. நாடாளு மன்றத்துல அறிவிச்சிட்டாங்க. தனியார் என்எல்சியை வாங்கப் போறாங்க அதற்காக அந்த groundsஐ prepare பன்னுறாங்க. அந்த தனியார் நிறுவனம், நாங்க சும்மா வாங்க மாட்டோம், நிலம் இருந்தால்தான் வாங்குவோம்னு சொல்லியிருக்காங்க. அதற்கு ஏஜென்டாக இவர்கள் எல்லாரும் செயல்படுகிறார்கள். இதுக்குள்ள மிகப்பெரிய பிரச்சனை இருக்கு இன்னும் கொஞ்ச நாளில் வெளியில் வரும். ஆனால், நாங்கள் சும்மா இருக்கப் போவது கிடையாது. ''
அண்ணாமலை சொல்வதெல்லாம் வேடிக்கை: ''என்எல்சியை எதிர்க்கும் எங்களுடைய போராட்டம் மத்திய அரசு, மாநில அரசு இரண்டு அரசுகளையும் எதிர்த்துதான். சமீபத்தில் அண்ணாமலை சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. அண்ணாமலை எதிர்க்கிறாரா? யாரை எதிர்க்கிறாரு, என்ன எதிர்க்குறாரு? ஏன் உங்க அரசுதான மத்தியில இருக்கு? அங்க போய் எதிர்க்க வேண்டியதுதானே? அண்ணாமலை மட்டுமில்ல இப்ப திமுகவும் இதே நிலைப்பாட்டைத்தான் 2 ஆண்டுகளுக்கும் முன்பு எடுத்தாங்க. இப்ப ஆளுங்கட்சியாக வந்த உடனே மாறிட்டாங்க.''
ஊருக்கு ஒரு நியாயமா? : ''என்எல்சி நிறுவனம் நமக்கு குறைந்த மின்சாரம் கொடுக்குறதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து, அவங்க எவ்வளவு கொடுக்குறாங்க அதுக்கு எவ்வளவு நிலத்தை எடுத்துக்குறாங்க. நிலத்தை எடுத்துகிட்டு அந்த மக்களை எப்படி அழிக்குறாங்க. தஞ்சாவூருக்கு ஒரு நியாயம், கடலூருக்கு ஒரு நியாயமா? கடலூரில் மக்கள் இல்லையா, வாக்காளர்கள் இல்லையா, பெண்கள் இல்லையா, விவசாயிகள் இல்லையா? தஞ்சாவூரில் மத்திய அரசு ஒரு நிலக்கரி சுரங்கம் அமைக்கப் போறாங்கனு சொன்ன உடனே அப்படியே தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு வருது, எல்லா விவசாய சங்கங்களும் வருது, எல்லா கட்சிகளும் வருது.''
என்னன்னு தெரியாது: ''விவசாயிகளுக்கு என்ன தெரியும். 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டாங்க. அப்ப என்னன்னு அவங்களுக்குத் தெரியாது. 1956 இல் இருந்து கிட்டத்தட்ட 45 கிராமம், 37 ஆயிரம் ஏக்கர் இரவோடு இரவாக விஜயமான் நகரம்னு ஒரு பகுதியில இறக்கி விட்டுட்டாங்க. அவங்க ளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடையாது. இதில் என்ன கொடுமை என்றால் 1956 இல் இன்றைக்கு கிட்டத்தட்ட 66 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மக்களுக்கு இன்னும் பட்டா கிடைக்கவில்லை. அவுங்க இருக்கிற நிலத்திற்கு பட்டா கிடைக்கவில்லை. வீடுகளுக்கு பட்டா கிடைக்கவில்லை. இதில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அந்த மாவட்டத்தின் மக்கள் நிலத்தை என்எல்சி நிர்வாகத்திற்கு கொடுத்தாங்க. ''

என்எல்சி பேராசை: ''நிர்வாகம் அந்த நிலக்கிரியை எடுத்து அதை எரித்து மின்சாரம் கொடுக்கதான் நிலத்தை கொடுத்தாங்க. ஆனால் என்எல்சி நிர்வாகத்தின் பேராசையால் அவுங்க அதிகமான நிலக்கரியை சுரண்டி அதை தனியாரிடம் வித்துகிட்டு இருக்காங்க. வித்திட்டு எங்களுக்கு நிலக்கரி இல்ல, எங்களுக்கு பயன்படுத்த முடியல. எங்களுக்கு வேறு நிலம் வேண்டும் என்று பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம். இதற்குள் ரொம்ப மோசமான ஊழல், பலவகையான ஊழல் நடைபெற்று வருகிறது. இந்த ஊழலுக்கு உடந்தை அங்கிருக்கும் எம்எல்ஏ, அமைச்சர்கள், நிர்வாகம் எல்லாரும் சேர்ந்துதான்.''
என்எல்சி டவுன்சிப்: ''10 ஆயிரம் ஏக்கர் 1985 ல் கையகப் படுத்திய நிலம் அப்படியே இருக்கு. அதை சும்மா வைத்திருக்காங்க. என்எல்சி டவுன்சிப் இருக்கு அதுவே கிட்டத் தட்ட 7 ஆயிரம் ஏக்கர் இருக்கு. அதில் பெரிய பங்களா, பெரிய பெரிய வீடு அங்க golf course வைச்சிருக்காங்க. எதுக்கு உங்க ளுக்கு golf course. ஆயிரம் ஏக்கரில் ஆடம்பரமா வாழ்ந்திட்டு இருக்காங்க. ஆனால் அங்கு வேலை யாருக்கு கொடுக்குறாங்க வட மாநிலத் தொழிலாளர் களுக்கு கொடுக்குறாங்க. சமீபத்தில் 299 பேர் ஜூனியர் இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்தார்கள். அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கிடை யாது. நிலத்தை எடுக்கிறார்கள், நமக்கு வேலை வழங்குவதில்லை என்றால் எதற்கு அந்த நிர்வாகம் இங்கு இருக்கிறார்கள். ''
surrender ஆவது ஏன்?: ''இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியிருக்கிறேன். பல கேள்விகளை எழுப்பி இருக்கிறேன். அமைச்சர்களை சந்தித்து இருக்கிறேன். என்னால் எவ்வளவு செய்ய முடியோ அவ்வளவு செய்திருக்கிறேன். ஆனால், என்னுடைய கேள்வி தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது. தமிழக அரசு என்எல்சியின் state holder. என்எல்சியிடம் அரசு surrender ஆவது ஏன்? ''
விவசாயிகளின் நண்பன்: ''விவசாயிகளின் நண்பன் என்று எதற்காக சொல்கிறீர்கள். விவசாயத்தை அழிக்கிறீர்கள், விவசாயிகளை அழிக்கிறீர்கள், துன்புறுத்துகிறீர்கள். அச்சுறுத் துறீர்கள். வேலை கொடுக்க மறுக்கிறீர்கள். நீரை அழித்து விட்டீர்கள், நிலத்தடி நீர் போயிடுச்சு. அந்த ஒரு மாவட்டத்தில் மட்டுமில்லை சுத்தியிருக்கிற மாவட்டத்திலும் போயிடுச்சு. விழுப்புரம் மாவட்டத்தில் 30, 40 அடியில் இருந்த நிலத்தடி நீர் 200 அடிக்கு போயிடுச்சு. ஏனென்றால் என்எல்சியால். கள்ளக் குறிச்சி மாவட்டத்திலும் இதே நிலைதான் இருக்கிறது.''
மாநில அரசு துரோகம்: ''என்எல்சியின் பேராசை சாதாரமானது கிடையாது. மக்களையும், மண்ணையும், வாழ்வாதாரத்தையும் அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு உடந்தையாக இருப்பது மாநில அரசு என்பதுதான் வேதனையான விஷயம். மாநில அரசு இனி விவசாயிகளின் தோழன் என்று பேசக்கூடாது. விவசாயிகளுக்கு மாநில அரசு துரோகம் செய்து கொண்டிருக்கிறது.''












Click it and Unblock the Notifications