எங்கள விட்டு போய்ட்டீங்களே.. பிள்ளைகளுடன் அழுது புரண்ட ஒத்தரோசா! குடும்பத்துடன் பக்கா ப்ளான்! ஷாக்!
கடலூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கணவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவ்வழக்கில் திடீர் திருப்பமாக கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மகன், மகள் உள்ளிட்ட 3 பேரை வேப்பூர் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தீபா இவர்களுக்கு 17 வயதில் 12ம் வகுப்பு படிக்கும் மகனும், 15 வயதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஆறுமுகம் 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த எட்டு மாதம் முன்பு தனது சொந்த ஊருக்கு மீண்டும் வந்துள்ளார்.

மர்ம மரணம்
இந்நிலையில் ஆறுமுகம் வீட்டில் கடந்த 7ஆம் தேதி இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆறுமுகம் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவியிடம் விசாரணை
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் ஆறுமுகம் தானாக இறக்கவில்லை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததால் வேப்பூர் போலீசார் ஆறுமுகம் மனைவி தீபாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை
பின்னர் விசாரணையில் ஆறுமுகம் தனது மனைவி தீபா மேல் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகம் அவ்வப்போது குடித்துவிட்டு மனைவி தீபா மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்பிடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீபா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

மனைவி, பிள்ளைகள் கைது
இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு ஆறுமுகம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து உறங்கி உள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட தீபா மற்றும் அவரது மகன் புஷ்பநாதன் மகள் கலைவாணி 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது பின்னர் போலீசார் தீபா மற்றும் அவரது பிள்ளைகள் புஷ்பநாதன், கலைவாணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications