கள்ளக்காதலில் விழுந்த ரவுடியின் மனைவி.. 23 வயது இளைஞரின் படுபயங்கர செயல்.. உறைந்து போன கடலூர்
ரவுடி மனைவியை 4 பேர் வெட்டி கொலை செய்துள்ளனர்
கடலூர்: ரவுடியின் மனைவியை, அவரது கள்ளக்காதலியே வெட்டி கொன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்... இவரது மனைவி பெயர் காந்திமதி.. 30 வயதாகிறது.. 2 குழந்தைகள் உள்ளனர்.. கிருஷ்ணன் ஒரு ரவுடி.. இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமீபத்தில் அதே பகுதியை சேர்ந்த வீரா என்ற ரவுடியை கிருஷ்ணன் கொலை செய்துவிட்டார்.. இதனால் கிருஷ்ணனை கைது செய்யும் சூழல் ஏற்பட்டது.. இவருடன் சேர்ந்து கொலையை செய்த மற்ற குற்றவாளிகள் தப்பித்து விட்ட நிலையில், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணன்
அப்போது கிருஷ்ணனை மட்டும் ஜீப்பில் ஏற்றி போலீஸார் கொண்டு சென்றுள்ளனர்... அப்போது போலீஸ் பிடியில் இருந்து கிருஷ்ணன் தப்பிக்க யோசித்து, அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் கழுத்தை அறுக்க முயற்சி செய்தார்.. ஆனால், அதற்குள் தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக, அந்த சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.. இதனால் கிருஷ்ணன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கும்பல்
இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணனின் மனைவி காந்திமதியை ஒரு கும்பல் கொலை செய்துவிட்டது.. கொலை செய்த அந்த 4 பேர் யார் என்று உடனடியாக தெரியவில்லை.. காந்திமதி கொலை குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.

கிருஷ்ணன்
அப்போதுதான் காந்திமதியின் கள்ளக்காதல் வெளியே தெரிய வந்தது.. கிருஷ்ணன் இறந்தவுடனேயே, அரவிந்த் என்பவருடன் காந்திமதிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. இந்த அரவிந்த் என்பவர், கிருஷ்ணனின் கூட்டாளியாம்.. 23 வயதாகிறது.. கிருஷ்ணன் இறந்தபிறகு, அடிக்கடி காந்திமதியின் வீட்டுக்கு அரவிந்த் சென்று வந்துள்ளார்.. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளது, காந்திமதியின் உறவினர்களுக்கும் தெரிந்து கண்டித்துள்ளனர்.

உறவினர்கள்
இதனால் ஒருகட்டத்தில் காந்திமதி தன் கள்ளக்காதலை முறித்து கொண்டுள்ளார்.. வீட்டுக்கும் வரவேண்டாம் என்று அரவிந்த்திடம் சொல்லவும், இது அரவிந்துக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணி உள்ளது.. அப்போதே கொலை மிரட்டலை காந்திமதியிடம் விடுத்துள்ளார்.. இதனால் பயந்துபோன காந்திமதி, தன் உறவினர்களிடமும் இதை பற்றி சொல்லி உள்ளார்..

16 வயது சிறுவன்
ஆனால் அவர்கள் இந்த பேச்சை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது... இதுதான் அரவிந்துக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.. எனவேதான், காந்திமதியை உடனடியாக கொலை செய்ய கூட்டாளிகளின் உதவியை நாடினார் அரவிந்த்.. அதன்படி, சம்பவத்தன்று காந்திமதி இரவு கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பைக்கில் அங்கு வந்து வழிமறித்துள்ளான். வீட்டில் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் என்று உதவிபுரிவது போல சிறுவன் பேசவும், காந்திமதியும் அதில் ஏறி சென்றுள்ளார்..

கைது
அப்போது வழியில் ஆயுதங்களுடன் காத்திருந்த அரவிந்தும், கூட்டாளிகள் 4 பேரும் காந்திமதியை வெட்டி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.. இதில் கொடுமை என்னவென்றால், கைதான 4 பேர்களில் 3 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களாம்.. அவர்களை போலீசார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications