ஜாக்கெட்டில் கழுத்தை நெரித்த சுதா.. கூரைவீட்டில் நடந்த பயங்கரம்.. கடலூர் ஷாக்..!

கடலூரில் 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கண்மூடித்தனமாக வந்த கோபத்தினால், இரு பச்சிளம் குழந்தைகளையும் கொன்றுவிட்டு, இளம்பெண் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ஐயப்பன்.. 34 வயதாகிறது.. ஜேசிபி ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.. இவரது மனைவி சுதா.. 30 வயதாகிறது.. 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே சமீப காலமாக தகராறு இருந்து வந்துள்ளது... சம்பவத்தன்றும் அப்படித்தான் சண்டை வந்துள்ளது... அப்போதிருந்தே சுதா அழுது கொண்டே இருந்திருக்கிறார்.

Young woman killed two children after suicide near cuddalore

சிறிது நேரம் கழித்து, ஐயப்பனின் தந்தை அதாவது சுதாவின் மாமனார் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.. அப்போது, சுதா புடவையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார்.. என்ன ஏதென்று பார்ப்பதற்குள், அங்கு 2 பேர குழந்தைகளும் சடலமாக கிடந்ததை பார்த்து அலறியே விட்டார்.

இதுகுறித்து வடலூர் போலீசாருக்கு தகவல் சொல்லப்படவும், அவர்கள் விரைந்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. அப்போதுதான், சுதா தன்னுடைய 2 குழந்தைகளையும் ஜாக்கெட்டினால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.. பிறகு சுதா, புடவையில் கூரை வீட்டில் தூக்கு போட்டு கொண்டுள்ளார்.

ஆனால், சம்பவம் நடந்தபோது, ஐயப்பனை காணவில்லையாம்.. அதுதான் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது.. இதனிடையே சுதாவின் அப்பா போலீசில் மகள் சந்தேகம் குறித்து புகார் தந்துள்ளார்.. அதில், சுதாவிடம் ஐயப்பன் குடும்பத்தினர் நகைகள் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனராம்.

சமீபத்தில்கூட 3 சவரன் நகையை மகளுக்கு தந்து அனுப்பியதாக சுதாவின் அப்பா அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரணை துரிதமாகி உள்ளது.. சுதாவின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+