டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2019: 2022ஆம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும்.. பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா!

Google Oneindia Tamil News

டெல்லி: 2022ஆம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-2020ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அனைவருக்கும மலிவு விலை வீடு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.95 crore houses from FY 20-22 will constructed: FM

1.95 கோடி வீடுகள் 2022ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 2015 - 2016ஆம் ஆண்டில் வீடு கட்டி முடிக்க 314 நாட்கள் ஆன நிலையில் கடந்த 2017- 2018ஆம் நிதியாண்டில் 114 நாட்களாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

வாடகை வீட்டுவசதிகளை மேம்படுத்துவதற்காக பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். தற்போதைய வாடகை சட்டங்கள் பழமையானவை என்றும் அவகுத்தகைதாரர்-குத்தகைதாரர் உறவுகள் நியாயமாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

கட்டுப்படியாகக்கூடிய வகையில் உள்கட்டமைப்பு நிலையை வழங்குவது, தரைவிரிப்பு பகுதியை அதிகரிப்பது மற்றும் வருமான வரையறைகளை மறு வரையறை செய்வது, மலிவு விலையில் வீடுகளை வழங்குவது என அரசு தொடரும் என்றும் மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மலிவு விலையில் வீடு வழங்கும் முயற்சியை அரசு தொடர்ந்து வருகிறது. பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் வீட்டு வசதிக்கான மானியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

English summary
The Finance Minister Nirmala Sitharaman has proposed that 1.95 crore houses from FY 20-22 will constructed under Pradhan Mantri Awas Yojana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X