100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்! பாஜகவை விடாத காங்கிரஸ்! நாடு முழுதும் இன்று முதல் ஆர்ப்பாட்டம்?
டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி 'விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) (விபி-ஜி ராம்-ஜி)' என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. இதை கண்டித்து இன்று முதல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் தாக்கல் செய்தார்.

100 நாள் வேலை திட்டம்
இந்த புதிய ஊரக வேலை உறுதி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இந்தப் பெயர் மாற்ற மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதையும், புதிய திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களையும் எதிர்த்து காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம்
அப்போது வேணுகோபால் பேசுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது, அதன் மூலம் வறுமை குறைந்ததுடன், தொழிலாளர்களின் இடம்பெயர்வும் கட்டுப்படுத்தப்பட்டது..
மேலும், கிராமப்புறங்களில் கால்வாய்கள், அணைகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உருவானது. கொரோனா பெருந்தொற்று போன்ற நெருக்கடியான காலங்களில் இந்த திட்டம் மக்களின் பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டது..
பழைய ஊரக வேலை உறுதி திட்டம்
ஆனால், புதிய "ஜி ராம் ஜி" திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு உறுதியான உத்தரவாதம் இல்லை, போதுமான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக அழித்து வருகிறது என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், "மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்கள் விவசாயிகளின் போராட்டத்தால் திரும்பப் பெறப்பட்டது நினைவிருக்கலாம்.. அதுபோலவே இப்போதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள ஜி ராம் ஜி திட்டம் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.. எனவே, புதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஊரக வேலை உறுதி திட்டத்தையே தொடர வேண்டும்..
நாடு தழுவிய போராட்டம்
"மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை காக்கும் இயக்கம்" என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில் ஜனவரி 8-ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் தொடங்கப்படும், இந்த போராட்டம் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும்.. இது தேசிய அளவிலான இயக்கமாக இருக்கும்" அதிரடியாக அறிவித்திருந்தார்..
அந்தவகையில் இன்று முதல் காங்கிரஸ் தன்னுடைய போராட்டத்தை கையில் எடுக்கும் என்று தெரிகிறது..
தமிழக காங்கிரஸ்
100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் மீண்டும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 24ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 30ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை "VBG RAMG" என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள்











Click it and Unblock the Notifications