ராஜ்யசபா: போட்டியின்றி 11 பேர் தேர்வு..பாஜக கூட்டணிக்கு முதல் முறையாக பெரும்பான்மை.. இனி அதகளம்தான்!
டெல்லி: லோக்சபாவில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ராஜ்யசபாவில் போதுமான பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போதைய ராஜ்யசபா தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் 11 பேர் போட்டியின்றி தேர்வானதால் பெரும்பான்மைக்கான 119 இடங்களை அக்கூட்டணி பெற்றுவிட்டது. இனி பாஜக கூட்டணி அரசு தமது விருப்பத்துக்குரிய அனைத்து மசோதாக்களையும் ராஜ்யசபாவில் எளிதாக நிறைவேற்றிவிடும் என்கிற சூழல் உருவாகி உள்ளது.
ராஜ்யசபாவில் 12 எம்பி பதவி இடங்கள் காலியாக இருந்தன. 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 எம்பி பதவி இடங்களில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 11 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜ்யசபா எம்பிக்கள்: ராஜ்யசபாவில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 250. மாநிலங்களில் இருந்து 238 எம்பிக்களும் நியமன எம்பிக்களாக 12 பேரும் தேர்வாகின்றனர். ராஜ்யசபாவில் தற்போதைய மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 237. ஆகையால் பெரும்பான்மைக்கு தேவை 119 எம்பிக்கள்.
பெரும்பான்மை பெற்ற பாஜக கூட்டணி: தற்போது 12 எம்பிக்களான தேர்தலில் 12 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள். இதனையடுத்து ராஜ்யசபாவில் பாஜவுக்கு மட்டும் எம்பிக்கள் எண்ணிக்கை 96 ஆக உள்ளது. பாஜக கூட்டணிக்கான மொத்த எண்ணிக்கை 112. நியமன எம்பிக்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை எம்பி ஒருவரது ஆதரவுடன் மொத்தம் 119 எம்.பிக்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளனர். இதன் மூலம் ராஜ்யசபாவில் தற்போதைய நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட்டது.
ராஜ்யசபாவில் பாஜக கூட்டணி எம்பிக்கள் விவரம்:
பாஜக - 96
ஜேடியூ- 4
என்சிபி-3
சிவசேனா-1
பாமக-1
ஏஜிபி-1
யுபிபிஎல்-1
தமாகா-1
குடியரசு கட்சி-1
ஆர்எல்எம்-1
ஆர்எல்டி-1
ஜேடிஎஸ்-1
மொத்தம் 112 எம்பிக்கள் + 6 நியமன எம்பிக்கள் +1 சுயேட்சை எம்பி
ராஜ்யசபாவில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பலம்:
காங்கிரஸ் 27
திரிணாமுல் காங்கிரஸ் 13
ஆம் ஆத்மி 10
திமுக 10
ஆர்ஜேடி- 5
இடதுசாரிகள் 6
சமாஜ்வாதி -4
ஜேஎம்எம் 3
முஸ்லிம் லீக்- 2
என்சிபி-2
சிவசேனா-2
கேரளா காங்கிரஸ்-1
மதிமுக-1
இந்தியா கூட்டணி எம்பிக்கள் பலம் 86
எந்த கூட்டணியிலும் இடம் பெறாத கட்சிகளின் எம்பிக்கள் பலம்:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்- 11
பிஜூ ஜனதா தளம்-8
அதிமுக -4
பிஆர்எஸ்- 4
பிஎஸ்பி-1
என்பிபி-1
நியமன எம்பிக்கள் 3
4 கட்சிகளின் 27 எம்பிக்கள்: தற்போதைக்கு எந்த அணியிலும் இடம் பெறாத ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜேடி, அதிமுக, பிஆர்எஸ் கட்சிகளிடம் மொத்தம் 27 எம்பிக்கள் உள்ளனர். பாஜக கூட்டணி கொண்டு வரும் அத்தனை மசோதாக்களையும் இந்த 3 கட்சிகளும் முழுமையாக ஆதரிக்கப் போவதும் இல்லை. அப்படி ஆதரித்தாலும் கூட " எதிர்க்கட்சிகளின் பலம்" என்பது 113 எம்.பிக்களாகத்தான் இருக்கும். பாஜக கூட்டணியிடம் 119 எம்.பிக்கள் உள்ளனர்.
சர்ச்சை மசோதாக்கள்?: இதனால் லோக்சபாவில் தாங்கள் நினைக்கிற மசோதாக்களை எளிதாக நிறைவேற்றுகிற மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இனி வரும் காலங்களில் ராஜ்யசபாவில் இந்த மசோதாக்களை மிக எளிதாகவே நிறைவேற்ற வாய்ப்புள்ளது என்பதுதான் கள நிலவரம்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications