மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது? பதிலளிக்க தமிழக மக்கள் அதிக ஆர்வம்.. ஜன் மன் சர்வேயில் 3வது இடம்
டெல்லி: நரேந்திர மோடி பிரதமராக 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடு எப்படி உள்ளது? என்பது பற்றிய கருத்து கணிப்பை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக ‛நமோ’ செயலியில் ‛ஜன் மன்’ சர்வே தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 62 ஆயிரம் பேர் கருத்துதெரிவித்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டில் முதல் முறையாக நரேந்திர மோடி பிரதமரானார். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் வென்று 2வது முறையாக பிரதமரானார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்ற பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக 11 ஆண்டை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து அவரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ‛நமோ’ செயலியில் ‛ஜன் மன்’ சர்வே தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமராக நரேந்திர மோடியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வே தொடங்கிய ஒரே நாளில் 5 லட்சம் பேர், நமோ செயலியில் தங்களின் கருத்துகளின் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 1,40,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் மகாராஷ்டிராவில் இருந்து 65,775 பேர் கணக்கெடுப்பில் பங்கேற்று பதில் அளித்துள்ளனர். இந்த வரிசையில் 3வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. ஒரே நாளில் 62,580 பேர் பதிலளித்துள்ளனர். அதேபோல் குஜராத்தில் இருந்து 43,590 பேரும் ஹரியானாவில் இருந்து 29,985 பேரும் சர்வேயில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் மத்திய அரசின் ஆட்சி, பொருளாதார சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் போன்ற முக்கிய பகுதிகள் உள்ளடக்கிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசாங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகள் குறித்து மக்களின் கருத்துக்க அறிய முடியும். இந்த கருத்துக்கணிப்புக்கு தொடக்கத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மத்திய அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications