தொடர்ந்து எதிரொலிக்கும் மணிப்பூர் விவகாரம்.. லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் காரணமாகத் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், இன்று அவை கூடியது முதலே எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். இதையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டின் ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது அங்கே மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு தான் மணிப்பூர் குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்
இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். சில மசோதாக்கள் மட்டும் எதிர்க்கட்சிகளின் விவாதம் இல்லாமல் நிறைவேறி வருகிறது.
மணிப்பூர் விவகாரம் குறித்துக் குறுகிய விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதிலும், இது தொடர்பாக நீண்ட விவாதம் தேவை என்றும் இதற்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும், மணிப்பூர் குறித்து விவாதம் நடக்கும் போது பிரதமர் மோடி அவையில் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இதன் காரணமாகக் கடந்த 10 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், 11ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications